பக்கம்:பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

plastic - குழைம் .... stage குழைம் நிலை ... theory குழைமவியல் கோட்பாடு thermo ... - வெப்ப இளகு குழைமம் setting...... - வெப்ப இறுகு குழைமம் என அமைந்த பதிவுகளில் plastic stage, plastic theory எனவும் thermo plastic, setting plastic எனவும் தலைமைப் பதிவை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பதிவமைப்பு முறை குறிப்பிட்ட கருத்து, பொருண்மை சார்ந்த சொற்களை ஒரே இடத்தில் காண உதவும் தன்மையதாய் உள்ளது. எடுத்துக்காட்டாக mechanical, specific, yield தொடர்பான பல்வேறு சொற்களையும் அந்தந்தப் பதிவுகள் உள்ள இடங்களிலேயே பெற இந்தப் பதிவமைப்பு பயன்படும். automatic sub-station - see : sub-station எனச்சில பதிவுகளுக்குக் குறுக்கு நோக்கீடு (cross reference) தரப்பட்டுள்ளது. இவ்வகைச் சொற்களுக்கு, sub station - துணை மின்நிலையம் automatic .... - தானியங்கித் துணை மின் நிலையம் என அந்தந்தத் தலைமைப் பதிவுகளின் கீழ் அமைந்த பதிவுகளில் உரிய தமிழ்க் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. இந்தக் கலைச்சொல்லாக்கப் பணியில் தமிழுணர்வோடு ஈடுபட்டு ஒத்துழைத்த துறை வல்லுநர்களுக்கும் அறிவியல்தமிழ் ஈடுபாட்டோடு உதவிபுரிந்த மொழி வல்லுநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. துறை வல்லுநர்களும் மொழிவல்லுநர்களும் பரிந்துரைத்த நெறி முறைகளுக்கேற்ப கலைச்சொற்களைச் செப்பனிடும் பணியைச் செவ்வனே செய்துமுடித்த அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வு உதவியாளர் முனைவர் சா, உதயசூரியன் பணியைப் பாராட்டி மகிழ்கிறேன்.