பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாதுகாப்புச் சட்ட அமுல் 119

வுக்கு அனுப்ப விரும்பாததாகவும் அதன் சாரத்தை மட்டும் அவர்க்குத் தெரிவித்து விட்டதாகவும் ஒரு அறிக்கை வெளியிட்டார்கள்.

தமக்கு அனுப்பும் கடிதத்தைத் தடுக்க சர்க்கார் துணியமாட்டார்கள் என்று ஜின்ன முழங்கினரே, இப்பொழுது தடுத்துவிட்டார்களே, என்ன செய்தார் ? அவர் அதைப்பற்றி வருந்தவுமில்லை, சர்க்கார்க்கு எழுதவு மில்லை. அதற்குப் பதிலாக காந்தியடிகள் தம்முடைய கொள்கையை மாற்றி பாகிஸ்தானே ஒப்புக்கொள்ளாமல் கடிதம் எழுதி எனக்கும் சர்க்காருக்கும் மனஸ்தாபம் உண்டாக்க முயன்றுவிட்டார் ‘ என்று அடிகள் மீது சீறி விழுந்தார். பாகிஸ்தான் விஷயத்தை இருவரும் கலந்து பேசாமலே காந்தியடிகள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் பிறகு இருவரும் கலந்து பேசவேண் டிய அவசியம் ஏது? சமரஸ்ம் பேசவேண்டாமா என்று சர்க்காரிடம் கேட்டால் காங்கிரஸ் குற்றத்தை ஒப்புக் கொள்ள ட்டும் என்கிறார்கள் ; ஜின்னவிடம் கேட்டால் காங்கிரஸ் பாகிஸ்தானை ஒப்புக்கொள்ளட்டும் என்று கூறுகிரு.ர். எப்படி யிருக்கிறது இவர்களுடைய நியாயம் ?