பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

புதிய வைஸிராய் நியமனம்

பஞ்சம் சூறையாடிக்கொண் டிருந்தது. அதைப் போக்கவல்ல தேசிய சர்க்கார் ஏற்படவில்லை, என்ன செய்வது என்று தேசம் தத்தளித்துக்கொண் டிருந்தது. அப்பொழுது சேனதிபதியாய் இருந்த வேவல் பிரபு வைஸி ராயாக நியமிக்கப்பட்ட விஷயம் கேட்டதும் ஜனங்கள் விமோசனம் வந்தாலும் வரலாம் என்று எண்ணினர்கள்.

எகிப்துக்கு சுதந்தரம் கொடுத்தே தீரவேண்டும் என்று பிடிவாதம் செய்து வெற்றிபெற்ற ஆலன்பி தளபதியின் சரித்திரத்தை எழுதி வரும் வேவல் பிரபு அல்லவா?

“ அழையாமல் வந்த விருந்தினர் அதிக நாள் இருந்த பின்பும் நன்றியறிவான வார்த்தை ஒன்றுக டக் கூரு திருந்தால் வீட்டுக்காரனுடைய உணர்ச்சி எ ப்படி யிருக்குமோ அவ்விதமான உணர்ச்சியே எகிப்திய தேசீய வாதிகளிடமும் காணப்பட்டது.” என்று அதில் எழுதி இருப்பதால் நம்முடைய உணர்ச்சியையும் மதித்து கடப்பார் அல்லவா?

அத்துடன் வைஸ்ராய் என்று நியமனம் பெற்றதும் அவர் பத்திரிகைக்காரர்களுக்கு அளித்த பேட்டியில்