பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

.ே ப ா ர்

இப்படி யிருக்கையில் ஐரோப்பாவில் கீழ்புறம் ஸோவியத் ரஷ்யாவும் மேல்புறம் ஜெர்மனியும் பலத்தைத் திரட்டிவந்தன. பிரிட்டன் ஹிட்லர் செய்வதை வெறுத் தாலும், அதை ஏன் என்று கேட்க பயந்து, அவரைச் சமாதானப்படுத்திக் கொண்டே வந்தது. ஆனல் எவ்வ ளவு தாரம் சமாதானப்படுத்திலுைம் ஹிட்லர் தம் கருத்திலேயே கண்ணுயிருந்தபடியால் பிரிட்டிஷ் பிரதம மந்திரி சேம்பர்லேன் செய்த முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த ரோய்விட்டன.

ஆகவே 1939ம் வருஷம் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று, ஹிட்லர் யாதொரு முன்னெச்சரிக்கையு மின்றி போலந்து தேசத்தைக் கைப்பற்றுமாறு தமது துருப்புகளே அனுப்பினர். உடனே சேம்பர்லேன் ஜெர்மன் துருப்புகளே வாபீஸ் வாங்காவிட்டால் போர் மூளும் என்று எச்சரிக்கை செய்தார். ஆனல் அது ஹிட்லர் காதில் விழவில்லை. அதனல் செப்டம்பர் மாதம் 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சேம்பர் லேன் ஜெர்மனியோடு போர் ஆரம்பம் என்று ரேடியோ மூலம் உலகத்துக்கு அறிவித்தார்.

இப்படி உண்டான யுத்தத்தில் நமக்குள்ள சம்பந்தம் யாது? இந்திய சர்க்கார் போர் வரலாம் என்று முன் கூட்டியே எண்ணி ஆகஸ்டு மாதத்திலேயே தம் வச முள்ள துருப்புக்களே மலேயாவுக்கும் எகிப்துக்கும் அனுப்பிவைத்தார்கள். ஆனல் அப்படிச் செய்யும்