பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பொழுது புலர்ந்தது

இப்படி ராஜாஜியைக் காங்கிரஸை விட்டு விலகி கின்று யோசிக்கும்படி செய்த முஸ்லிம் லீகின் லாகூர் தீர்மானமாகிய பாக்கிஸ்தான் - முஸ்லிம் ராஜ்யத் தீர் மானம் கூறுவது யாது?

அதன் சாரம் வருமாறு :(1) வட மேற்கிலும் வட கிழக்கிலும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மெஜாரிட்டியா யிருக்கிறார்கள்.

(2) அப்படி மெஜாரிட்டியா யிருக்கும் பிரதேசங்கள் அடுத்தடுத்து இருப்பவைகளே ஒன்று சேர்த்து எல்லை களே கிர்ணயம் செய்து தனி முஸ்லிம் ராஜ்யமாக ஆக்க வேண்டும்.

(3) அப்படிப் பிரித்தபின் இரண்டு ராஜ்யங்களும் மைனரிட்டி வகுப்பார்க்கு அவர்களேக் கலந்துகொண்டு தேவையான பாதுகாப்புக்களை அரசியல் சட்டத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும்.

(4) இரண்டு ராஜ்யங்களும் பாதுகாப்பு முதலிய விஷயங்களே ஏற்றுக்கொன்ஞவதற்குத் தகுந்ததாக அரசியல் அமைப்பை கிர்மாணம் செய்யவேண்டும்.

இந்தத் தீர்மானம் முஸ்லிம் ராஜ்யமாகப் பிரிக்க வேண்டும் என்று கூறுகிறதே தவிர (1) முஸ்லிம்கள் எவ்வளவு மெஜாரிட்டியாகவுள்ள பாகங்களை எந்த முறையில் ஒன்று சேர்க்கவேண்டும் என்பதைப் பற்றியும், (2) அந்தப் பிரதேசங்களிலுள்ள ஜனங்களிடம் பிரிந்து போவதைப் பற்றி எந்த முறையில் சம்மதம் கேட்க வேண்டும் என்பதைப் பற்றியும், (3) பிரிந்து போனபின் இரண்டு ராஜ்யங்களுக்குமிடையில் எந்தவிதமான உறவு இருக்கவேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகக் கூறவில்லை.