பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பொழுது புலர்ந்தது

ஆயிரக்கணக்கான ஊர்களிலே அதிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆனல் ஆகஸ்டு மாதம் ஜின்ன சாகிபுக்குத் திடீ ரென்று தேக அசெளக்யம் ஏற்பட்டதால் அவர்களுடைய சம்பாஷணை ஒத்திவைக்கப்பட்டது.

திரு. சவர்க்கரைத் தலைவராகக் கொண்ட அகில இந்திய இந்து மகா சபையார்கள் இந்தியா தேசம் எங்கள் புண்ணிய பூமி, அதைப் பிளக்கச் சம்மதிக்கமாட்டோம் என்று கிளர்ச்சி செய்தார்கள். அதுபோலவே மாஸ்டர் தாராசிங் தலைமையில் சீக்கியர்களில் ஒரு பகுதியாரும் கூறினர்கள். மகாகனம் ஸ்ரீநிவாஸ் சாஸ்திரியார் தேசத் தின் பெருமையும் பிரதேசங்களிடையிலுள்ள பெரிய ஸ்தானமும் பாதிக்கப்பட்டாலுங்கூடப் பாதகமில்லை, தேசத்தின் பாதுகாப்புக்குங்கட்ட உலேவைத்துவிடுமே, அதை எப்படிப் பொறுப்பது என்று பிரசங்கத்துக்கு மேல் பிரசங்கம் செய்து வந்தார். திருவிதாங்கூர் திவான் ஸர். ஸி. பி. ராமசாமி அய்யர் எந்தக் காரணம் எப்படிப் போனலும் இந்திய கிர்வாகம் ஒன்றாக இருந்தால்தான் உணவு முதலிய பல கார்யங்கள் ஒழுங்காய் நடைபெறும் என்று வற்புறுத்தினர்.

ஆயினும் நாடெங்கும் காந்தி-ராஜாஜி திட்டத்துக்கு எதிர்ப்பைவிட ஆதரவே அதிகம் என்று சொல்லலாம். அரசாங்கத்தின் அபிப்பிராயம் யாதாயிருந்தாலும் ஆங் கில நாட்டிலும் அமெரிக்காவிலும் சுதந்திரத்தையும் கியாயத்தையும் ஆதரிக்கும் தீர்க்கதிருஷ்டிவாய்ந்த பெரி யோர்கள் எல்லோரும் காந்தி அடிகளின் முயற்சிகளுக்கு ஆசியே கூறிவந்தார்கள்.