பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி-ஜின்ன சம்பாஷணை 161

உறுதி கூறினர். அதனல் ஜின்ன சாஹிப் காந்தியடிகளைக் காங்கிரஸின் பிரதிநிதியாகவே ஏற்றுக்கொண்டிருந்தால் தவருகாது. அப்படிச் செய்யாமல் அவர் காந்தியடிகள் யாருக்கும் பிரதிநிதியில்லே என்று தாம் எழுதிய ஒவ் வொரு கடிதத்திலும் எடுத்துக் காட்டிக் கொண்டேயிருக் தார்.

இதில் ஒரு விஷயம். காந்தியடிகள் காங்கிரசின் பிரதிநிதி என்று கூறுவதோடு இந்தியா தேசம் முழுவதற் கும் ஏகப்பிரதிநிதி என்று கூறுவதும் பொருந்தும். காந்தி யடிகள் ஜின்ன சாஹிபுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘ ஜாதிமத வித்தியாசமின்றி சகலரையும் வாட்டி கிற்கும் சங்கடமும் சோர்வும் என்னுடைய இருதயத்தையும் வாட்டி கிற்கின்றபடியால் நான் இந்திய மக்கள் எல்லோர்க்கும் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள ஆசையுடையவனுயிருக்கிறேன்’ என்று எழுதியுள்ளதை -யாரால் மறுக்க முடியும்?

அதல்ைதானே அமரிக்க அறிஞர் ஜோஸபைன் ரிப்ளி என்பவர் “ இந்தியாவில் 170 பிரதான பாஷைகளும் 544 கிளே மொழிகளும் உள என்பது உண்மைதான். ஆல்ை இந்தியா முழுவதற்கும் காந்தி என்ற ஒரே ஒரு குரல் தான் உண்டு ‘ என்று கிறிஸ்தியன் மானிட்டர் : என்னும் பத்திரிகையில் எழுதுகிரு.ர்.

563—11