பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பொழுது புலர்ந்தது

காந்தியடிகள் யுத்த லட்சியம் என்ன என்று கேளாமலே தாமாக ஊர் ஊராகச் சென்று யுத்தத்துக்குப் படை திரட்டிக் கொடுத்தார். ஆனல் அந்த உதவிக்கு எல்லாம் அடைந்த பலன் யாது? யுத்தம் முடிந்ததும் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வாயினிக்கப் பேசினர்கள். ஆனல் யுத்தம் முடிந்த பின்னர்,

“ காது குளிரப் பேசுவதும் கெஞ்சு கசச்கச்செய் வதுவே நமது முறை” என்று முன்னல் வைஸிராயா யிருந்த லிட்டன் பிரபு கூறினரே, அந்தப் பழைய பிரிட்டிஷ் தர்மத்தையே அனுஷ்டிக்கலானர்கள். போரில் செய்த உதவிக்குப் பரிசாக ரெளலட் சட்டம், ராணுவ ஆட்சி, ஜாலியன்வாலா அக்கிரமம், அடக்கு முறை அதிே கள் முதலியனவே கிடைத்தன. இவைகள் எல்லாம் ஞாபகத்தில் பதிந்திருந்த படியினல் தான் நமது தலைவர்கள்

ஜனங்களைக் கலவாமல் தேசத்தின் தலையில் சண்டை யைத் தூக்கி வைத்து விட்டீர்கள், ஆயினும் உங்கட்கு உதவி செய்யத்தயார், ஆல்ை இந்த யுத்தத்தின் லட்சியம் என்ன, அதைக் கூறுங்கள் முதலில்-என்று கூறினர்கள். அதல்ை மகாத்மா காந்தியடிகள் செப்டம்பர் மாதம் 26ம் தேதி வைஸி ராயைப் பேட்டி கண்டு-யுத்த லட்சி யங்கள் எவை, இந்தியா உயிர் கொடுத்தால் அடையும் லாபம் என்ன-என்று கேட்டார். சுதந்திரத்துக்காக யுத்தம் புரிவதாகக் கூறுகிறீர்களே, அந்தச் சுதந்திரம் இந்தியாவுக்கும் உண்டா, அப்படி உண்டானல் தானே இந்திய மகா ஜனங்கள் இந்த யுத்தத்தில் மனப்பூர்வமாக இறங்குவார்கள் என்று வைஸி ராய்க்கு விளக்கிக் கூறி ர்ை.

அதற்கு மறுநாள், அப்பொழுது இந்தியா மந்திரியா யிருந்த ஜெட்லண்டு பிரபு பிரிட்டிஷ் பிரபுக்கள் சபையில்