பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

சிம்லா மஹாநாடு

சிம்லா மஹாநாட்டுக்காக அழைக்கப்பட்டிருந்தவர் கள் ஜூன் 24ம் தேதி சிம்லா வந்து சேர்ந்தார்கள். மஹாத்மா மஹாகாட்டிற்குப் போகாமல் இருப்பதென் அறும் ஆலோசகர் ஸ்தானத்திலேயே சிம்லாவில் தங்கி யிருப்பதென்றும் முடிவு செய்தார்.

ஜூன் 25-ம் தேதி காலையில் மஹாங்ாடு வைசிராய் மாளிகையில் கூடிற்று. அங்கத்தினர்கள் வைசிராய் வேவல் திட்டத்தின் பொதுப்படையான தத்துவங்களே யெல்லாம் ஒப்புக்கொண்டனர்.

அதன்பின் கிர்வாக சபை அங்கத்தினர்களைத் தேர்ந் தெடுக்கும் விஷயத்தில் காங்கிரஸ்-சம் லீகும், ஒத்துப் போவதற்காக கோவிந்த வல்லபாய் பந்த் 3 நாட்கள் பெரு முயற்சிசெய்தார். ஆனல் பயனுண்டாகவில்லை. அதன் மேல் வைசிராய் ஒவ்வொரு கட்சித்தலைவர்களும் தனித் தனியாக அங்கத்தினர் ஜாப்தா தயாரித்து தம்மிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஜின்னுவின் வாதம்

ஜின்ன கீழ்க்கண்ட காரணங்களைக் கூறி ஜாப்தா சமர்ப்பிக்க மறுத்தார் :

1. ஹிந்து அங்கத்தினர்களும் முஸ்லிம் அங்கத்தினர் களும் ஒரே தொகையினராக இருப்பார்களென்று கூறிய போதிலும் கிர்வாக சபையில் முஸ்லிம்கள் மைனரட்டி யாகவே இருப்பார்கள். ஏனெனில் இந்துக்களுடன்,