பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பொழுது புலர்ந்தது

இந்திய தேசீய ராணுவம்

அந்தச் சமயம் சிங்கப்பூரில் ராஷ்பிகாரிகோஷ் என்று ஒரு இந்திய தேசபக்தர் இருந்தார். அவர் சில வருஷங் கட்கு முன் ஒரு வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட் டிருந்ததால் டோக்கியாவுக்குச் சென்று ஜப்பானியப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டு அங்கே வாழ்ந்துவங் தார். அவர் கீழ் நாடுகளிலுள்ள இந்திய மக்களிடம் சுதந்திர தாகத்தை உண்டாக்க முயன்றுகொண்டிருந்தார். அதன் காரணமாக “ இந்திய சுதந்திர லீக் “ என்று ஒரு ஸ்தாபனத்தை ஏற்படுத்தி யிருந்தார்.

ஜப்பானியர் மலேயாவைப் பிடித்தபின் அங்குள்ள மக்களை அனகரிகமான முறையில் கடத்த ஆரம்பித்தார் கள். அப்பொழுது ராஷ் பிகாரி போஸ் ஜப்பான் சர்க்கா ரிடம் சொல்லி இந்தியர்களே நல்லவிதமாக கடத்தும்படி ஏற்பாடு செய்தார். இத்துடன் இந்திய சுதந்திர லீக்கை யும் பலப்படுத்தி வந்தார். தாய்லாந்து, மலேயா, பர்மா, இந்தோ சைன, ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன், ஷாங் காய், ஜப்பான் ஆகிய கீழ்நாடுகளில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசித்துவந்தார்கள். அவர்களில் சுமார் 7: லட்சம் பேர் இந்திய சுதந்திர லீகில் அங்கத்தினர்களாகச் சேர்ந்திருந்தார்கள்.

இந்தச் சங்கத்தின் மகாநாட்டை ராஷ் பிகாரி போஸ் 1942 ஜூன் 15ம் தேதியன்று பாங்காக் நகரத்தில் கூட்டி வைத்தார். கீழ் நாடுகளிலிருந்தெல்லாம் ஏராளமான பிரதிநிதிகள் வந்திருந்தார்கள்.

இந்திய தேசிய ராணுவத்தை அமைக்க இதுவரைத் தயங்கிக் கொண்டிருந்த இந்திய ராணுவ அதிகாரிகள் 30 பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார்கள். தாய்லாந்தின் வெளிநாட்டு மந்திரியும் ஜெர்மனி, இத்தாலி ஜப்பான்