பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பொழுது புலர்ந்தது.

உயர்வாக நடத்துவதையும் பார்த்தேன். அத்துடன் இந்த யுத்தத்தில் சுதந்திரத்துக்காகவே காங்கள் போர் செய் தோம். சுதந்தரம் பிறர்க்கு வேண்டுமானல் எங்களுக்கும் வேண்டாமோ?” என்று கூறினர்.

இதிலிருந்து பார்லிமெண்டு அங்கத்தினர்கள் இந்திய மக்களுடைய சுதந்திர ஆசை எவ்வளவு அதிகமாக முதிர்ந்துபோய் இருக்கிறது என்பதைத் தெளிவாக அறிந்துகொண்டார்கள்.

இவ்விதமாக அவர்கள் இரண்டு மூன்று வாரங்கள் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இங்கிலாங் துக்குத் திரும்பிச் சென்று தங்கள் அபிப்பிராயத்தை பிரிட்டிஷ் மந்திரி சபையாரிடம் சமர்ப்பித்தார்கள்.

சட்டசபைத் தேர்தல்கள்

1946 ஜனவரி மாதத்தில் மாகாணச் சட்டசபைகளுக் குத் தேர்தல் நடந்தன இந்தத் தேர்தல்களிலும், காங்கிரஸ் மஹாசபைக்கே ஏராளமான ஸ்தானங் கள் கிடைத்தன. மொத்தம் ஸ்தானங்கள் 1585. இவை களில் 1937-ம் வருஷம் கடந்த தேர்தலில் 701 ஸ்தானங் களே கிடைத்திருந்தன. ஆனல் இப்பொழுது கிடைத்த ஸ்தானங்கள் 980 ஆகும். ஹரிஜன ஸ்தானங்கள் மொத் தம் 151-ல் 12 போக எஞ்சிய ஸ்தானங்களெல்லாம் காங் கிரசுக்கே கிடைத்தன.

இதன் காரணமாக 8 மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் உண்டாயின.

முஸ்லிம் லீக் பாக்கிஸ்தான் வேண்டும் என்று தேர் தல் பிரசாரம் நடத்தியபோதிலும் முஸ்லிம்கள் பெருவாரி யாக உள்ள மாகாணங்களில்,