பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிட்டிஷ் மந்திரி துாதுகோஷ்டி 231

காங்கிரஸ் திட்டம் : இதற்காகக் காங்கிரஸ் கூறும் திட்டம் இது :

1. மாகாணங்களுக்குப் பரிபூரணமான சுயஆட்சி.

2. மத்திய அரசாங்கத்துக்கு அயல் நாட்டு உறவு, பாதுகாப்பு, போக்கு வரத்து முதலிய சில விஷயங்களின் நிர்வாகம் மட்டும்.

.ே இஷ்டப்பட்டால், மாகாணங்கள் வேறு விஷயங் களேயும் மத்திய அரசாங்கத்துக்குக் கொடுப்பது.

இந்தத் திட்டத்தால், கட்டாயமாகக் கொடுக்கப்படும் விஷயங்களே கிர்வகிக்கும் மந்திரிகள் இந்தியா முழுவதுக் கும், இஷ்டப்பட்டுக் கொடுக்கும் விஷயங்களே கிர்வகிக் கும் மந்திரிகள் அப்படிக் கொடுக்கப்படும் மாகாணங் கட்கும், பொறுப்பு வகிப்பது போன்ற பல கஷ்டங்கள் நேருமாதலால், நாங்கள் காங்கிரஸ் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சமஸ்தானங்கள் : இந்தியா சுதந்தரம் அடைந்து விட் டால், அதன்பின் சமஸ்தானங்களுக்குப் பிரிட்டிஷ் சர்க் காருடன் உள்ள தொடர்பு நீங்கிவிடும். இதைச் சமஸ் தானதிபதிகள் ஏற்றுக்கொள்வதோடு, இனி ஏற்படப் போகும் சுதந்தர இந்தியாவுடன் சேர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள். எந்த விதத்தில் ஒத்துழைப்பது என்பது அரசியல் திட்டம் அமைக்கும் பொழுது பேசி முடித்துக்கொள்ள வேண்டிய விஷய மாகும்.

எங்கள் சிபாரிசு: இறுதியாக, எந்தக் கட்சியாருடைய நலன்களையும் பாதிக்காமல், உறுதியாகவும் அனுபவ சாக்கியமாகவுமுள்ள ஓர் அரசியலை வகுப்பதற்காகக் |ேக்கண்ட யோசனையை காங்கள் கூறுகின்றாேம்.