பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்கால சர்க்கார் 255.

(5) அரசியல் நிர்ணய சபைக்கு மாகாணங்களில் தேர்தல் கட்த்துமாறு கவர்னர்களுக்கு அறிவிக்கப்பட் டிருக்கிறது.

இந்தத் திட்டம் சம்பந்தமாக காங்கிரஸ் அக்கிரா சனருக்கும் வைசிராய்க்கு மிடையில் கடிதப் போக்கு. வரத்து நடந்தது. ஜின்ன சாகேப் சில கேள்விகளே வைசிராய்க்கு அனுப்பிவைத்தார். வைசிராய் அந்தக் கேள்விகளையும் அவற்றுக்கு அவர் எழுதிய பதில்களையும் காங்கிரஸ் அக்கிராசனர் மெளலான ஆசாதுக்கு அனுப்பி வைத்தார்.

காங்கிரஸ் கருத்து

இவைகளை எல்லாம் காங்கிரஸ் காரியக் கமிட்டி யார் வெகு கவனமாகப் பரிசீலனை செய்தார்கள். து.ாது கோஷ்டியாருடைய அரசியல் கிர்ணய சபைத் திட்டத்தைச் செயல் முறையில் பரீகூைடி செய்து பார்க்க விரும்பிய போதிலும் இடைக்கால சர்க்கார் திட்டமானது தேசிய ஸ்தாபனமான காங்கிரஸ் மஹா சபையை ஒரு வகுப்பு ஸ்தாபனமாக ஆக்கிவிடக் கூடியதா யிருந்தபடி யால் அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் அரசியல் நிர்ணய சபை வேலையும் சரிவர நடைபெருது, தேசிய முஸ்லிம்களே கைவிட்டதாகவும் ஆகும் என்று எண்ணி ஞர்கள். -

காங்கிரஸ் மகாசபை தேசிய ஸ்தாபனமாகவே இருந்து வருவதாலும் முஸ்லிம் லீகில் சேராத ஐந்து பெரிய முஸ்லிம் ஸ்தாபனங்கள் இருப்பதாலும் அவைகள் எல்லாம் காங்கிரஸையும் தேசியத்தையுமே ஆதரிப்ப தாலும் காங்கிரஸ் காரியக் கமிட்டியார் இடைக்கால சர்க்காரில் தேசிய முஸ்லிமையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிஞர்கள்.