பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பொழுது புலர்ந்தது

தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அக்ராசனர் பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையில் காரியக் கமிட்டியார் ஜூன் 25-ந் தேதி செய்த தீர்மானத்தைப் பரிசில அன செய்வதற்காகக் கூடியது.

மெளலான ஆஸாத் அந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளும்படியாகப் பிரேரித்து

“ தாது கோஷ்டியின் திட்டத்தை ஏற்றுக் கொள்வ தால் காங்கிரஸ் மகாசபை தன்னுடைய பரிபூரண சுதந்திர லட்சியத்தையும் காட்டின் ஏகத்துவ லட்சியத் தையும் விட்டுவிட்டதாக எண்ண வேண்டாம். துரது கோஷ்டியார் பரிபூரண சுதந்தரம் தரவும் அதற்கான அரசியலை வகுக்க அரசியல் கிர்ணய சபை நடத்தவும் ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுடைய மத்திய சர்க்கார்த் திட்டம் காங்கிரஸ் லட்சியத்துக்கு ஒத்ததாகவே இருக் கின்றது. தொகுதி முறைதான் நம்மால் பூரணமாக ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறது. சேர வேண் டுமா சேர வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மாகாணங்கட்கு உரிமை உண்டு என்றே நாம் வியாக் கியானம் கூறுகிருேம். நம்முடைய வியாக்கியானமே சரியானது என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினர்.

அதன்பின் தீர்மானத்தை ஆமோதித்த ஸர்தார் வல்லபாய் படேல்,

“ அத்துடன் ராஜ்யாதிகாரம் சமாதான முறையில் இந்தியர் கைக்கு வருவதாக இருப்பதால் நாம் திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதும் அவைசியமாக நாட்டைப் போராட்டத்தில் இறங்கிவிடக் கூடாது என் பதும் என்னுடைய திடமான எண்ணம். முஸ்லிம் லீகர் கள் பாகிஸ்தான் கிடைக்கும் என்று எண்ணு கிறார்கள். நாம் வேறுவிதமாக எண்ணுகிருேம். யார் எண்ணுவது