பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பொழுது புலர்ந்தது

-

ஜின்னு கோபம்

இதை அறிந்ததும் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்ன சாகேபுக்கு கோபம் பொங்கிவிட்டது. முஸ்லிம் லீக் கெளன் சிலைக் கூட்டினர். ஆவேசத்துடன் பிரசங்கம் செய்தார், பிரிட்டிஷ் சர்க்கார் தங்கள் வாக்குறுதியை மீறி காங்கிரஸ்-டன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு விரோத மாகச் சதி செய்வதாகக் கூறினர். பிரிட்டிஷ் மந்திரிகளே முட்டாள்கள் என்றும் மோசக்காரர்கள் என்றும் திட்டினர்.

அவருடைய யோசனையின் பேரில் அந்தக் கெளன் வில் ஜூலை மாதம் 29ந் தேதியன்று மூன்று தீர்மானங் களே கிறைவேற்றிற்று. அவற்றின் சாரமாவது :

(1) துரது கோஷ்டியின் திட்டத்தில் காணப்படும் நீண்டகால அம்சத்தையும் இடைக்கால அம்சத்தையும் கிராகரித்து விடவேண்டும்.

(2) பிரிட்டிஷ் சர்க்காரிடம் முஸ்லிம்கள் பெற். றிருந்த பட்டங்களை யெல்லாம் துறந்துவிட வேண்டும்.

(3) பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராக நேரடியான போராட்டம் ஆரம்பிக்கவேண்டும். அதற்காக ஆகஸ்ட் 16ம் தேதியை “ நேரடி நடவடிக்கைத் தினமாக ‘ நாடெங்குமுள்ள முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும்.

பட்டங்களேத் துறக்கும்படி கூறிய தீர்மானப்படி முஸ்லிம்கள் பட்டங்களைத் துறந்தார்கள். ஆனல் 1921ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை இதே மாதிரி யான “பட்டத்துறவு”த் தீர்மானம் செய்தபோது எப்படிப் பட்டதாரிகள் மடமடவென்று பட்டங்களைத் துறந்தார் களோ அப்படி அதிகமான முஸ்லிம்கள் பட்டங்களைத் துறந்து விடவில்லை.