பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பொழுது புலர்ந்தது.

தின் சட்டங்களை மீறி சிறை புகுந்த வீரர், அந்த ஒன்பது தடவைகளிலும் மொத்தமாகப் பத்து வருஷம் இரண்டு மாதம் சிறைச்சாலையில் தாய் காட்டின் விடுதலைக்காகத் தவங்கிடந்த பெரியார், தமக்குப்பின் வாரீசாக காந்தியடி களால் கருதப்பட்ட தேச பக்தர், இத்தகைய பண்டித ஜவஹர்லால் நேரு புது தில்லியிலுள்ள சர்க்கார் மாளிகை யில் வீற்றிருந்து சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டார். அவரைப் போலவே வாழ்நாளெல்லாம் ஆங்கில அரசாங்கத்துக்கு பரம விரோதிகளாய் இருந்து போராடி சிறையில் பல வருஷங்களைக் கழித்த சர்தார் படேல், ராஜாஜி, ராஜேந்திர பாபு முதலியவர்கள் இந்தியாவை ஆளும் அரசாங்க அதிகாரத்தை ஒப்புக்கொண்டார்கள்.

காந்திஜி கருத்து

அன்று அதிகாலையில் எல்லோரும் தாங்கிக்கொண் டிருந்த பொழுது காந்தியடிகள் எழுந்திருந்து இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் புதிய மந்திரிகள் செய்ய வேண்டிய கடமை என்ன என்பதைப் பற்றி பண்டித ஜவஹர்லாலு நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினர்.

அன்று மாலை கடந்த பிரார்த்தனேக் கூட்டத்தில் அவர் கடறியதின் சாரமாவது :

இன்று இந்து தேச சரித்திரத்தில் மிகவும் விசேஷ மான நாள். இந்த தினத்தைக்கான இந்தியா தேசம் எவ்வளவோ காலமாகக் காத்துக் கொண்டிருந்தது. ஆயினும் பூரண சுதந்திரம் கிடைத்து விட்டதாக எண்ண வேண்டாம். இது அந்த ஏணியில்முதல் படி மட்டுமே யாகும். I

பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக இருந்து வந்த சச்சரவைச்