பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயராஜ்ய ஆரம்பம் 273

சமாதானமான முறையில் தீர்த்து வைக்க முடிவு செய்திருப்பதற்காகப் பிரிட்டிஷ் சர்க்காருக்கு வந்தன மளிக்கின்றேன். அந்த சர்க்கார் இதற்கு முன் என்ன செய்திருந்தாலும் பழைய தவறுகளை எடுத்துக்கூறிக் கொண்டிருப்பதற்கு இது சமயமன்று.

அதிகாரம் முழுவதும் இன்னும் நம் கைக்கு வந்து சேரவில்லை. வைஸ்ராயும் இருக்கிறார். சேனேயும் இருக்கிறது. நம்முடைய முடிகுடா மன்னரும் முதல் பிரதம மந்திரியுமான பண்டிட் நேருவும் அவருடைய சகாக்களும் கடைமைகளைச் சரியாகவும் பரிபூரணமாக வும் கிறைவேற்றுவார்களானல் அதிகாரம் முழுவதும் காலதாமதமின்றிச் சீக்கிரத்திலேயே கைக்கு வந்து சேர்ந்துவிடும் என்று எண்ணுகின்றேன்.’ என்று கூறினர்.

இப்படி 300 வருஷ காலமாக இரும்பை யொத்த இங்கிலீஷ் ஆட்சியின்கீழ் அடிமைகளிலும் அடிமைகளாக உழைத்து வந்த 40 கோடி இந்திய மக்கள் காந்தி யடிகளின் அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்து சொற்ப தியாகத்தின் மூலமாகச் சுலபமாகப் பூரண சுதந்திரம் பெற்றுவிட்டது உலக சரித்திரத்தில் எங்கும் கண்டிராத ஒரு அற்புதமேயாகும். அதேைலயே இந்த க்ற்செய்தி யைக் கேட்டதும் நமது நாமக்கல் கவிஞர்,

அச்சமற்ற வீரனுகி அறிவின்மிக்க பெருமையால்

அகிலதேச நேசமுற்ற ஆண்மையுள்ள ஜவஹரும்

கொச்சையற்ற நேர்மைவாழ்வு கொண்டுஎங்கும் யாவரும் கும்பிடத் தகுந்தவல்ல பாய்படேலாம் தீரனும்

உச்சமாகும் கருணைவாழ்வில் உள்ளம்ஊன்றி நின்றிடும்

உயர்குணத்தின் பெயர்படைத்த ராஜன்பாபு ஒருவனும் 563–18