பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 பொழுது புலர்ந்தது

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால், புன்மை யிருட்கணம் போயின யாவும்

என்பது உண்மையே. சூரியன் உதயமாகி விடுவான். சுகவாழ்வு பெறுவோம். ஆதலால்,

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

பூமியிலெவர்க்குமினி அடிமை செய்யோம்-பரி

பூரணத்துக்கே யடிமை செய்து வாழ்வோம்.

வாழ்க நீ எம்மான் இந்த

வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி

விடுதலை தள1றிக்கெட்டுப் பாழ்பட்டு நின்ற தாமோர்

பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி

மகாத்மா ! நீ வாழ்க ! வாழ்க !

வந்தே மாதரம்

ஜே. ஹிந்த்