பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகுப்பு வேற்றுமை 21

காடுடைய வள்ளலும் பிரிட்டிஷாரின் கஷ்டத்தை உப யோகித்துக் கொள்ள விரும்பாத சாந்தமூர்த்தியாய் விளங்குகிரு.ர்.

ஆல்ை பிரிட்டிஷார் நீரிலும் நெருப்புப் பிறக்கச் செய் யும் கோக்கம் உடையவர்கள் போலவே நடந்து கொண் டார்கள். இந்தியா மந்திரி ஜெட்லண்டு பிரபு மறுபடியும் டிஸம்பர் 15-ம் தேதி பார்லிமெண்டு சபையில் தமது கர்ண கடுரமான பழைய பல்லவியையே பாட ஆரம்பித்து விட்டார். ஐயோ! உங்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து விட காங்கள் எப்பொழுது எப்பொழுது என்று காத்துக் கொண்டிருந்தாலும் நீங்கள் உங்களுக்குள் வகுப்பு ஒப் பக்தம் செய்துகொள்ள மாட்டோம் என்று பிடிவாதம் செய்கிறீர்களே என்று கூறினர். ஆகா! அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடுவதில் எவ்வளவு ஆவல்! எவ்வளவு ஆத்திரம்! நாம் பிரிந்து நிற்பதைக்கண்டு அவர் களுக்கு எவ்வளவு பரிவு! எவ்வளவு பரிதாபம்!

இவருடைய பேச்சு இந்தியத் தாயின் புண்ணில் கோலிட்டதுபோல் ஆயிற்று. இதைப் பரிசீலனை செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டியார் வார்தாவில் டிஸம்பர் 22-ம் தேதி கூடிஞர்கள். ர்ேக்கமாக ஆலோசித்துச் செய்த முடிவின் சாரம் வருமாறு :

(1) அன்னிய ஆட்சி ங்ேகினுல்தான் சாஸ்வதமான ஒற்றுமை உண்டாகும்.

(2) வகுப்பு ஒற்றுமை உண்டாக்க அரசியல் கிர்ணய சபை ஒன்றுதான் வழி.

(3) சிறுபான்மையோர்க்கு திருப்தி உண்டாகுமளவு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் பட்சபாதமற்ற மத்தியஸ்தத்துக்கு விடவேண்டும்.