பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முஸ்லிம் லீக் வருகை 287

6. ஜகஜீவன் ராம் 7. ஸர்தார் பலதேவ் ஸிங் 8. டாக்டர் மத்தாய் 9. வி. எச். பாபா 10. லியாகத் அலிகான் 11. சுந்திரிகார் 12. அப்துல் ராப் கிஷ்டார் . 13. கஜ்காபர் அலிகான் 14. ஜோகேந்திரநாத் மண்டல்

இந்த மந்திரி சபை ஏற்பட்டதும் மகாத்மா காந்தி யடிகள் கீழ்கண்டவாறு 27-10-46 ஹரிஜன் பத்திரிகை யில் எழுதினர் :

‘ முஸ்லிம் லீகர்கள் இடைக்கால சர்க்காரில் சேர்ந்து கொள்ளத் தீர்மானித்திருக்கிறார்கள். அதனுல் தேசத் துக்கு நன்மை உண்டாகும் என்று நம்பினேன். ஆஞ்ல் அவர்கள் ஒரு ஹரிஜனேயும் நியமித்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். முஸ்லிம் லீக் முற்றிலும் வகுப்பு ஸ்தாபனமேயாகும். அப்படியிருக்க அவர்கள் ஹரிஜன் ஒருவரை எப்படித் தங்களுடைய பிரதிநிதியாக கியமிக்க முடியும்? அதனல் அவர்கள் சண்டை போடு வதற்காகவே மந்திரி சபைக்கு வந்திருக்கிறார்களோ என்று எண்ணும்படியாயிருக்கிறது. ஆயினும் அவர்கள் சண்டை போடாமல் சகோதரர்கள் போல் ஒத்துழைப் பார்கள் என்றும், இந்தியா முழுவதற்குமாகச் சேவை செய்வார்கள் என்றும் எண்ணுகிறேன். உண்மையான பாரத புத்திர ராகவும் ஊழியராகவும் கடந்து கொள் வார்கள் என்றும் நம்புகிறேன்.”

நாமும் அவ்விதமே நம்புவோமாக !

வந்தே மாதரம் ! ஜே. ஹிந்த் !