பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம்கார் காங்கிரஸ் 29.

-

மைக்கு மார்க்கம் என்றல்லவோ உலக சரித்திரம் முழங்கு கின்றது?

இவை கிற்க. இப்போது உடனே செய்யப்போகும் அரசியல் மாற்றம் யாது? வைஸி ராயின் சட்டசபையில் சில தலைவர்கள் சேர்த்துக்கொள்ளப் படுவதால் என்ன பிரயோஜனம் உண்டாகும்?

இந்த விதமாகப் பல ஆட்சேபனைகள் செய்யக் கூடியதா யிருந்தாலும் மகாத்மா காந்தியடிகள் “ லின் லித்கோ பிரபு கூறும் யோசனையில் கெளரவமான ஒரு சமரஸத்துக்கு இடம் உண்டாகும்போல் தோன்றுகிறது” என்று கருதினர். அதுபோலவே அதைப் பரிசீலனே செய்வதற்காக வார்தாவில் கூடிய காரியக் கமிட்டியாரும் அபிப்பிராயப் பட்டார்கள். அதனால் அவர்கள் காந்தி யடிகள் வைஸி ராயிடம் சென்று அவருடைய யோசனை யில் கண்ட சில அம்சங்களைத் தெளிவாகக் கேட்டு வர வேண்டுமென்று விரும்பினர்கள்.

அப்படியே காந்தியடிகள் வைஸி ராயைப் பேட்டி கண்டு பேசினர். ஆனல் அதன் பயனக ஒன்றும் உருப் படியாகாமல் போய்விட்டது. ஜனங்கள் எல்லோரும் சமரஸம் ஏற்பட்டுவிடலாம் என்று எதிர்பார்த்தது வெறுங்கனவாய் மறைந்துவிட்டது. வைஸிராய் யுத்த காலம்-வகுப்பு வேற்றுமை என்ற காரணங்களைக் கூறி, இதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி முடித்து விட்டார்.

அதை ஒட்டியே இந்தியா மந்திரி ஜெட்லண்டு பிரபு வும் பார்லிமெண்டு சபையில் காங்கிரஸ் சபை கண் முன்னல் உள்ளதை மறந்து கனவு லோகத்தில் சஞ்சரித் துக் கொண்டிருக்கிறது. அரசியல் அமைப்பைத் தயாரிக் கும் வேலையை இந்தியர்களிடம் விட்டுவிட்டால் அரை நொடியில் வேற்றுமைகள் எல்லாம் மறைந்துபோகும்