பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பொழுது புலர்ந்தது

என்று கூறுகிறது. அதை நாம் ஏற்றுக்கொள்ள முடி யாது ‘ என்று கூறினர்.

அதன்மேல் காந்தியடிகள்-சர்க்கார் பரிபூரண சுதந்திரம் கொடுப்பதாகக் கூறுவது உண்மையானல் அந்தஸ்தைப் பற்றி முடிவு செய்வதை அரசியல் கிர்ணய சபையிடம் விட்டுவிட ஏன் தயங்கவேண்டும்? அவர்க ளுடைய தயக்கம் எதைக் காட்டுகிறது? அவர்களுக்கு அதிகாரத்தை விட்டுவிடப் பிரியமில்லை என்பதைத் தானே ? அதை ஜெட்லண்டு பிரபுவும் உறுதிசெய்து விட்டார் அல்லவா? அதல்ை இனியும் சர்க்காரிடம் உங்கள் யுத்த கோக்கம் என்ன என்று கேட்கவேண்டிய அவசியம் உண்டா?-என்று அறிக்கை வெளியிட்டார்.

காந்தியடிகள் வைஸி ராயின் யோசனையைக் கண்ட தும் சமரஸம் ஏற்பட்டுவிட ஏதுவுண்டு என்று சந்தோ வடிப்பட்டார். சட்டமறுப்பை ஆரம்பியாமல் சமரசத்துக் குப் போவானேன் என்று போஸ் முதலியவர்கள் கேட்ட பொழுது சத்யாக்ரகத்துக்கு என்ன அவசரம், சமரசத் துக்கு வழி உண்டா இல்லையா என்று பார்ப்போமே, சர்க்கார் சரிப்பட்டு வரலாம் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு இருந்து வருகிறது-என்று கூறினர். வைஸி ரா யிடம் போய் வெறுங்கையோடு திரும்பி வந்தபொழுதும்... “ நான் போன காரியம் தோல்விதான், ஆயினும் அதையே வெற்றிக்கு ஏறும் படியாக உபயோகித்துக் கொள்வேன் ‘ என்று உரைத்தார்.

இவ்விதம் பிரிட்டிஷாரிடம் உறுதியான நம்பிக்கை வைத்திருந்த காந்தியடிகளுங்கூட இந்தியா மந்திரி ஜெட்லண்டு பிரபுவின் பிரசங்கத்தைக் கண்டு மனக் கொதிப்பு அடையலானர்.

இது இப்படி இருக்க அந்தச் சமயம் காங்கிரஸ் தலைவரான பாபு ராஜேந்திர பிரஸாத் காச நோயால்