பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராம்கார் காங்கிரஸ் 31

கஷ்டப்பட்டபடியால் தம்முடைய பதவியினின்று விலக விரும்பினர். தேசத்திலுள்ள காங்கிரஸ் பக்தர்கள் எல்லோரும் மெளலான அபுல்கலாம் ஆளலாதே தலைவராக இருக்கவேண்டும் என்று ஆசைப் பட்டார்கள். அவர் முதலில் தயங்கினலும் எல்லோருடைய வேண்டுகோளே யும் மறுக்கமாட்டாமல் தேர்தலுக்கு அபேட்சகராக நின்று அமோகமான வோட்டுக்களால் நாட்டின் முடி குடா மன்னர் பதவியைப் பெற்றார். அவர் அன்று முதல் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நடந்துகொண்ட மாதிரியும் காட்டிய திறமையும் இந்தச் சமயத்தில் அவரை விடச் சிறந்த தலைவர் கிடைத்திருக்க முடியாது என்று சான்று பகர்கின்றன.

அவருடைய தலைமையில் காங்கிரஸ் கமிட்டியார் பாட் ைநகரத்தில் 1-3-40ல் கூடி கிலேமையை நன்றாகப் பரிசீலனை செய்து ஒரு நீண்ட தெளிவான தீர்மானம் செய்தார்கள். அதன் சாரமாவது :

(1) இந்தியரிடம் கேளாமல் இந்தியாவை யுத்தத்தில் இறக்கியது இந்திய மகா ஜனங்களுக்கு அவமானமாகும். (2) பிரிட்டிஷ் சர்க்காரின் கூற்றுக்கள் யுத்தம் நடைபெறுவது ஏகாதிபத்தியத்தைக் காப்பதற்காகவே என்று தெளிவுபடுத்தி விட்டன.

(3) அதல்ை காங்கிரஸ் மகாசபை இந்த யுத்தத்தில் கலந்துகொள்ள முடியாது.

(4) பரிபூரணமான சுதந்திரமே இந்தியாவின் லட்சியம்.

(5) இந்தியா சுதந்திரம் அடைய விரும்புவது இந்தியா முழுவதற்குமே ஆகும்.

(6) ஜனங்கள் தாம் அதை வகுக்கவேண்டும். (7) வகுப்பு வேற்றுமைகளைத் தீர்க்க அரசியல் கிர்ணய சபை தவிர வேறு வழி கிடையாது.