பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பொழுது புலர்ந்தது.

(8) சகல வகுப்பார்க்கும் திருப்தியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

(9) சமஸ்தானங்களும் அன்னியர் நலன்களும் ஜனங் களுடைய அரசுரிமையைப் பாதிக்கவிட முடியாது.

(10) சுதந்திர லட்சியத்தைப் பெறுவதற்காகவே காங்கிரஸ் மந்திரி சபைகள் ராஜிநாமாச் செய்தன.

(11) காங்கிரஸ் ஸ்தாபனம் சட்டமறுப்பு செய்யத் தகுதி அடைந்ததும் அதை ஆரம்பிக்க வெண்டும்.

(12) ஆயினும் காந்தியடிகள் பரிபூரணமான கட்டுப் பாடு இருப்பதாகக் கண்ட பிறகே சட்ட மறுப்பை ஆரம் பிப்பார்.

(13) சட்டமறுப்பை ஆரம்பிக்க எண்ணுவது ஜனங்க வளிடம் தியாக புத்தியை எழுப்புவதற்காகவே.

இரண்டு வாரம் கழித்து ராம்காரில் காங்கிரஸ் மகா சபை கூடிற்று. அதில் பாட்விைல் காரியக்கமிட்டியார் செய்த தீர்மானம் ஒன்றுதான் ஆலோசனை செய்யப் பட்டது.

பொதுவாக ஜனங்களிடம் பரபரப்பு அதிகமாக இருந்தது. காந்தியடிகளும் காரியக் கமிட்டியாரும் ஏழெட்டு மாதமாக இடைவிடாது முயன்றும் இங்கிலீஷ் சர்க்கார் இம்மியளவும் அசைந்து கொடுக்கவில்லையே, இன்னும் சர்க்காருடன் என்ன சமரஸம், இப்பொழு தேனும் சட்ட மறுப்புப் போர் ஆரம்பித்தால் என்ன என்று எங்கும் பேசலானர்கள். பண்டித நேருவுங்கூட இனிமேல் காத்திருக்க முடியாது என்று முழங்கினர்.

ஆனல் மகாத்மா காந்தியடிகள்-சட்ட மறுப்பு ஆரம்பிக்க வேண்டியது அவசியம்தான் ஆலுைம் அவசரப் படவேண்டாம், இன்னும் சமரஸ்த்துக்கு வழி உண்டா என்று பார்ப்போம்-என்று விஷயாலோசனைக் கமிட்டியில் கூறினர்.