பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பொழுது புலர்ந்தது

இப்பொழுது அவர் நாட்டை இரண்டாகப் பிரித்து விடச் சம்மதித்தாலன்றி சுதந்திரம் அளிப்பதைப் பற்றிச் பேசச் சம்மதிக்க மாட்டேன் என்று கூறலானுர்,

இந்தப் பாகிஸ்தான் யோசனையைக் கண்டதும் காந்தியடிகள்-’ இரண்டு சமூகங்கள் என்னும் தத்துவம் உண்மையானதன்று. கடவுள் ஒன்றாய் இணைத்து வைத் துள்ளதை ஒருநாளும் பிரித்துவைக்க முடியாது ‘ என்று கடறினர்.

ஆல்ை அமெரி துரை, ஜின்னுவின் இரண்டு சமூகப் புதிரைக் கேட்டதும்-” ஆமாம், சுதந்திரம் கொடுக்கு முன் ஒன்பது கோடி முஸ்லிம்களைத் திருப்திப்படுத்த வேண்டியதுதான் “ என்று கூறலாஞர்.

அவ்வளவுதான், இந்தியாவிலுள்ள ஆறு பெரிய முஸ்லிம் ஸ்தாபனங்களில் ஒன்றேயாகிய முஸ்லிம் லீக் அத்தனே முஸ்லிம்களுக்குமே ஏகப் பிரதிநிதியாகி விட்டது!

இப்படி ஒருபக்கம் காந்தியடிகள் இந்தியாவின் கெளரவத்தைக் காப்பதற்காக சத்யாக்ரகம் நடத்திக். கொண்டிருக்கும்பொழுது, இந்தியாவை இரண்டாகப் பிரிக்கும்வரை சுயராஜ்யம் வேண்டியதில்லை என்று ஜின்னவும், வேற்றுமை இருக்கும்வரை நாங்கள் விலகு வது எப்படி என்று அமெரியும் முழங்கிக் கொண்டிருந் தார்கள்.

இப்படி அமெரி வேற்றுமை, வேற்றுமை என்று இடைவிடாது கூறி வருகிருரே “ இது தனித் தொகுதி முறை’ ஏற்படுத்தியதன் விளைவுதான் அல்லவோ? இந்த முறை வந்த பிறகுதானே ஆயிரம் வருஷமாக ஒற்றுமையாக வாழ்ந்துவந்த இந்து-முஸ்லிம்களிடை வேற்றுமை உணர்ச்சி அரும்பலாயிற்று. இந்த முறை சுயராஜ்ய வளர்ச்சிக்குத் தடையாய் கிற்கிறது ‘ என்று