பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரின் தாராளம் 59

பிரிட்டன் தோல்வி அடையக்கூடாது, ஜெயிக்க வேண்டும் என்றே இந்தியர்கள் விரும்புகிரு.ர்கள். அத் துடன் பிரிட்டன் ஜெயிப்பது கிச்சயம் என்றும் நம்பு கிறார்கள். பிரிட்டன் தோற்றால் இந்தியாவுக்கு அபாயம் என்பதை ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனல் பிரிட்டன் இந்தியாவுக்குச் சுதந்திரம் அளியாதவரை இந்தியாவுக்காகச் சண்டை செய்கிறது என்பதை ஏற்றுக் கொள்வது எப்படி?

பிரிட்டிஷ் சர்க்காருடைய வெள்ளைத்தாள் ‘, யுத்த சமயத்தில் அரசியல் அமைப்பில் மாற்றங்கள் செய்வது அதுபவசாத்தியமான விஷயமன்றே என்றும், அப்படி மாற்றங்கள் செய்வதற்கும் முக்கியமான வகுப்பாரிடை ஒற்றுமை உண்டாக வேண்டியது அத்தியாவசிய மாயிற்றே என்றும் பழய பாடத்தை ஒப்புவிக்கிறது.

யுத்த சமயத்தில் அரசியல் சட்ட மாற்றங்கள் சாத்தியமில்லை என்றால், பிரிட்டனுக்கு அதோகதி என்று கூறுமாறு போர் வெகு மும்மரமாயிருந்த சமயம் பிரிட்ட னும் பிரான்ஸ்-சம் ஒரே ஐக்கிய நாடாக சட்டம் இயற்றத் தயாரானதும், ஜமைக்கா, டிறினிடாட், பிரிட்டிஷ் கயான, ஆகிய நாடுகளில் அரசியல் சட்ட மாற்றங்கள் செய்ததும் எப்படிச் சாத்தியமாயின ? அங்கு சாத்தியமானது இங்கும் சாத்தியமாகாதோ ?

எங்கள் யோசனைகளை ஏற்றுக் கொண்டால் எவ்வித மாற்றமும் வேண்டியதில்லை என்று பம்பாயில் கூடிய மிதவாதிகள் கூறினர்களே, அந்த யோசனைகளையுங் கூட ஏற்றுக்கொள்ள வில்லையே ஏன் ?

இதிலிருந்து சர்க்காருக்கு இம்மிகூடத் தங்கள் அதி: காரத்தைக் குறைத்துக்கொள்ள விருப்பம் இல்லை என் பது தானே தெளிவாகிறது ? -