பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பொழுது புலர்ந்தது

வைஸி ராய் கிர்வாக சபையில் செய்த மாற்றங்களோடு கிற்கவில்லை. ‘ தேசியப் பாதுகாப்பு கவுன்ஸில்’ ஒன்று ஸ்தாபிப்பதாகவும், அதை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூட்டி யுத்த கிலேமையை தெரிவிப்பதாகவும் கூறி அதற்கும் மெம்பர்களே நியமித்தார். ஆனல் அதிகாரமோ பொறுப்போ இல்லாத இந்தச் சபையால் என்ன நன்மை உண்டாய் விடும்? தேசத்தின் பிரதிநிதிகள் இல்லாத சபையை தேசியப் பாதுகாப்பு சபை என்று எப்படிச் சொல்ல முடியும் ?

ஆனல் ஜின்ன சாகேப் அதை ஒன்றும் சிந்திக்க வில்லை. நம்முடைய கோரிக்கைக்கு இணங்காததால் யுத்த முயற்சியில் கலந்துகொள்ள வேண்டாம், லீக் மெம்பர்கள் விலகிக்கொள்ளுங்கள் என்றுமட்டுமே கூறி ர்ை. அப்படிக் கூறினரே, அந்த சபை வெறும் ஆலோசனை சபை மட்டுந்தான் என்பதையும், பஞ்சாபிலுள்ள முஸ்லிம் லீக் பிரதம மந்திரி படை திரட்டுவதில் பரி பூரணமாக ஈடுபட்டிருப்பதையும் மறந்து விட்ட்ாரே ஏன்? முஸ்லிம் லீக் யுத்த முயற்சிகளில் கலந்து கொள்வ தில்லை என்றால் அவரை ஏன் படை திரட்டுவதினின்றும் தடுக்கவில்லை ? அது கிற்க. -

வைஸி ராயின் அறிக்கையை விளக்க இங்கிலாந்தில் வெளியாகும் சர்க்கார் அறிக்கையை வெள்ளைத்தாள் ” என்று கூறுவார்கள். அது வெறும் வெள்ளைத்தாள்தான், அதில் இந்தியர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதான அறிகுறி அணுவளவும் காணப்பட வில்லை. அதற்குப் பதிலாக பிரிட்டிஷாருடைய பலத்தைப் பெருக்குவதாகவே காணப்பட்டது.

பிரிட்டன் தோல்வி அடைந்தால் இந்தியாவுக்கு அபாயமாம், அதல்ை இந்தியாவைக் காப்பாற்றுவதற்காக வும் பிரிட்டன் போர் புரிகிறதாம்.