பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்க்காரின் தாராளம் 57

அதை நீக்கும் பொருட்டு வைஸி ராய் லின்லித்கோ பிரபு தாம் 1940 ஆகஸ்டு மாதம் வெளியிட்ட யோசனை களே ஒட்டி தம்முடைய நிர்வாக சபையில் பொறுப் புள்ள ஸ்தானங்கட்கு பிரதிநிதித்வம் வாய்ந்த உத்யோகப் பற்றற்ற இந்தியர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புவ தாகக் கூறி 21-7-41ல் இந்திய மெம்பர்களின் தொகை யைக் கூட்டி உத்யோகப்பற்றில்லாதவர் பெரும்பான்மை யோராக இருக்கும்படி செய்தார்.

இது ஜனங்களில் எந்தக் கட்சியார்க்கும் திருப்தி அளிக்கவில்லை. வைஸி ராய் கிர்வாக சபையில் செய்த மாற்றங்கள் இரண்டு :-(1) அதிகமான இந்திய மெம்பர் கள். (2) உத்யோகப்பற்றில்லாதவர் மெஜாரிட்டி.

அத்தனை பேருமே இந்தியர்களாயிருந்தாலும் என்ன பயன்? அவர்கள் வெறும் ஆலோசனை சொல்லுபவர்கள் தானே, அதிகாரம் எல்லாம் வைஸி ராயின் கையிலேயே அல்லவா?

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இலாகாக்களும் முக்கியமில்லாதவைகளே. ஆங்கில மெம்பர்கள் கையி லுள்ள விஷயங்களே அவர்களுக்கு ஏன் மாற்றவில்லை ?

அதுவும் தவிர சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் பிரதிநிதித்வம் வாய்ந்தவர்களா ? அதுவுமில்லை. அவர்கள் எல்லோரும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனப் பிரதிநிதிகள் அல்லர். வைஸி ராயின் ஊழியர்களே ஆவர். ஆதலால் இதுவல்ல காங்கிரஸ் கேட்ட தேசிய சர்க்கார் என்று காந்தியடிகளும்-இதுவல்ல காங்கள் கோரிய நிர்வாக சபை மாற்றம் என்று மிதவாதிகளும் கூறினர்கள்.

ஜின்ன சாகேப் முஸ்லிம் லீக் தலைவன் நானிருக்க என்னேக் கேளாமல் என்னுடைய லீக் மெம்பர்களே கியமித்து விட்டாரே என்று கோபப்பட்டார்.