பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலர்ந்தது

கிரிப்ஸ் வருகை

சர்ச்சில் துரை இந்தியாவை விட்டுவிடவா மந்திரி யானேன் என்று கூறிக்கொண்டிருந்த அதே சமயத்தில் ஜப்பானும் யுத்தத்தில் கலந்து கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றலாயின. நேசதேசங்களில் இருந்த ஜப்பானியர் தமது தாய் நாட்டுக்கு அவசரமாகத் திரும்பிப் போய்க் கொண்டிருந்தார்கள். அமரிக்காவும் பிரிட்டனும் ஜப்பானுக்கு மண்ணெண்ணெய் அனுப்பி வந்ததை நிறுத்தி விட்டன.

அதன் பேரில் ஜப்பானிய ஸ்தானதிபதி அமரிக்க சர்க்காரோடு சமரலம் பேசிக் கொண்டிருந்தார். ஆயி ஆணும் அதே சமயத்தில் ஜப்பானியர் யாதொரு யுத்தப் பிரகடனமும் செய்யாமல் அமரிக்காவுக்குச் சொந்தமான பிலிப்பைன் தீவிலுள்ள பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி அளவற்ற சேதம் விளைவித்தார்கள். ஆகவே யுக்கம் கிழக்கிலும் வந்துவிட்டது, இதுவரை யுத்த ரங்கத்திற்கு வெகு தொலையிலிருந்த இந்தியாவையும் சமீபிக் து விட்டது.

இங்கச் சமயம் சர்க்கார் என்ன யோசித்தார்கள் ? காந்தியடிகளின் சத்யாக்கிரகத்தால் யுத்த முயற்சிக்கு கொஞ்சமும் ஊறு உண்டாகவில்லை. தேசத்தின் அமைதி குறையவுமில்லை. ஜெர்மன் கொள்கைக்கு விரோதமான வர்களே ஜெயிலில் அடைத்து வைத்திருப்பதைக் குறித்து மற்ற நாட்டார்கள் குறை கூறுகிறார்கள், இப்பொழுது