பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பொழுது புலர்ந்தது

வங்காள சிந்து பிரதம மந்திரிகளாகிய ஹக்கும் அல்லாபக்ஷ-ம் இன்னும் வேற்றுமை வேற்றுமை என்று கூறிக்கொண்டிராமல் உடனேயே அதிகாரத்தை இந்திய ஜனப்பிரதிநிதிகளிடம் கொடுத்து தேசப் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிக்கை விடுத்தார்கள்.

அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ்’ போன்ற அதிகச் செல்வாக்குடைய பத்திரிகைகள் எல்லாம் இந்தி யாவைச் சமாதானப்படுத்தி அதன் ஒத்துழைப்பை உடனே பெறவேண்டும் என்று வற்புறுத்தின. அமெ ரிக்க ஜனதிபதி ரூஸ்வெல்ட் இந்திய பிரச்னையை தீர்த்து வைக்கும்படி சர்ச்சிலுக்கு எழுதினர்.

இங்கிலாந்தில் அரசாங்கத்தை ஆதரிக்கும் டைம்ஸ் பத்திரிகையும்கூட அப்படியே எழுதியது. இந்தியா விஷ யத்தில் எப்பொழுதும் சர்ச்சிலைத் தாக்கி எழுதும் டெய்லி மெயில் பத்திரிகை அமெரியை விலக்கிவிட வேண்டும் என்றுகூடக் கூறலாயிற்று. பார்லிமெண்டு மெம்பர்களும் சர்க்கார் ஏதேனும் உடனே செய்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினர்கள்.

சைனுவின் சேனதிபதியான மாபெருந் தலைவர் சியாங்கேஷேக் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தவர்சைனவுக்கும் இந்தியாவுக்கும் சுதந்திரம் இல்லை என் ருல் உலகத்தில் ஒருநாளும் உண்மையான சமாதானம் உண்டாக முடியாது, ஆனல் சைவுைம் இந்தியாவும் சுதக் தரமாய் வாழ்வதற்கும் உலகம் முழுவதுமே சுதந்தரம் பரவியிருக்க வேண்டும். அதல்ை இந்தியா இந்த யுத்தத் தில் இறங்காமல் விலகி நிற்கக்கூடாது, உலகில் பெரும் பாகம் இந்தியருடைய சுதந்திர விருப்பத்தில் அதுதாபம் உடையதாய் இருக்கிறது. பிரிட்டனும் இந்திய மகா ஜனங்கள் கேட்கும் முன்பே அவர்களுக்குக் கூடிய சீக்கி ரத்தில் சகல அதிகாரத்தையும் கொடுத்துவிடும் என்று