பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 83

- - - - _

தில் நாம் ஜனநாயகத்துக்காகப் போர்செய்வது உண்மை யானுல் போலந்திடம் பரிவுகாட்டுவதுபோலவே இந்தியா விடமும் காட்டவேண்டாமா? என்று பார்லிமெண்டுசபை யில் முழங்கியவர். அப்படிப்பட்டவர் இப்பொழுது ஹிந்து முஸ்லிம் வேற்றுமையைக் காட்டுவதும், காந்தியடி களின் கருத்தைத் திரித்துக் கூறுவதும், காங்கிரஸ்மீது பழி சுமத்துவதும் ஏன்?

  • ஏகாதிபத்திய யந்திரத்தில் ஒரு சக்கரமாய்விட்ட படியால் அவருக்கு அதனுடைய குணம் வந்துவிட்டது.” என்று காந்தியடிகள் கூறுவதுதான் காரணம். ஆம், நேரு கூறுவதுபோல அவர் சாத்தானுக்கு வக்காலத்து வாங்கி விட்டார். அந்தப் புண்ணிய மூர்த்தியின் வக்கில் இந்தவித மாகப் பேசாமல் எந்தவிதமாகப் பேசுவார்?

அப்படி எகாதிபத்திய இரத்தம் ஒட ஆரம்பித்து விட்டபடியில்ைதான், அவர் சம்பாஷணைகள் கடத்திய காலத்திலேயே, “வேற்றுமை உண்டாக்கிக் கொண்டிருந் கால் விரும்பியபடி எல்லாம் ஆளலாம் ‘ என்னும் ஏகாதி பக்திய இராஜதந்திர சாஸ்திரத்தின் முதற் குத்திரத் தைக் கையாள ஆரம்பித்து விட்டார்.

வைஸி ராய் கிர்வாகசபை மெம்பராயிருந்த டாக்டர் ராவ் கூறியதுபோல அவர் ஒருவரிடம் பேசியதுபோல ஒருவரிடம் பேசாமல் ஆளுக்கு ஆள் வேறு விதமாகப் பேசினர். இப்படி வித்யாசமாகப் பேசி மனக்கசப்பு ஏற்படச் செய்வது கூடாது என்று பிரிட்டிஷ் பிரதம பிஷப் டாக்டர் டெம்பிள் கண்டித்தது யாவரும் அறிவார்கள்.

முஸ்லிம் பத்திரிகைகள்-ஹிந்துப் பத்திரிகைகள்

என்ற பாகுபாடு இதுவரை கேட்டிருக்கிருேமா, இல்லையே. அப்படியிருக்க கிரிப்ஸ் ஆஸாதுக்கு எழுதிய