பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கௌதம பிக்கு ⚫ 101

சேர்ந்து சிதறுவது போலத்தான். “நாம் சேர்ந்திருக்கிறோம்” என்று எண்ணுவதே ஒரு கனவு. அப்படி இருக்கையில் எந்தப் பொருளையும் நமது என்று நினைப்பதும் தவறாகும். உலகமே மாறி விடுகிறது. இதை உணராமல் நாம் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

‘ஆதலால் என் உண்மை ண்பனாகிய நீ சோகத்தை விட்டுத் திரும்பிச் செல்வதே முறை. மேற்கொண்டும் உன் அன்பு நிலைத்திருக்குமானால், பின்னால் ஒரு முறை வந்து பார்த்துக்கொள்ளலாம்.’

‘கபிலவாஸ்துவின் மக்களுக்கு என் உறுதியை உள்ள படியே விளக்கிச் சொல்லிவிடு! “நீங்கள் அவரிடம் கொண்டுள்ள அன்பை விட்டு விடுங்கள்! வயோதி கத்தையும், சாவையும் அழித்து வெற்றிகொண்டு அவர் விரைவிலே இங்கு திரும்புவார்; இல்லாவிடின், தமது கோரிக்கை நிறைவேறாமல், தாமே அழிந்துவிடுவார்!” என்று தெரிவித்துவிடு!’

இந்தச் சொற்களை அருகிலேயிருத்து கேட்டுக்கொண்டிருந்த குதிரை கண்டகம் தன் நாவினால் அவர் பாதங்களை வருடிக் கண்களிலிருந்து நெருப்புத் துளிகளைப் போன்ற கண்ணீரைப் பெருக்கிக் கொண்டிருந்தது. அதன் உணர்ச்சியைக் கண்ட சித்தார்த்தர் உள்ளன்போடு அதைத் தடவிக் கொடுத்தார். தரும சக்கரம் பொறித்த அவருடைய திருக்கரத்தால் அதைத் தட்டிக் கொடுத்து, பரிகளுக்குரிய நன்றியை நீ நன்கு காட்டிவிட்டாய். துயரத்தை ஒழித்துச் சாந்தியோடிருப்பாயாக! நீ செய்த சேவைக்கு விரைவிலே உனக்குப் பயன் கிட்டும்!’ என்று கூறினார்.

பின்னர் சந்தகன் கையிலே கொடுத்திருந்த தமது உடை வாளை வாங்கி, உறையிலேயிருந்து அதை