பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 போதி மாதவன்

கோசத்தின் வட எல்லையில் சாக்கிய வகுப்பினர் வாழ்ந்து வந்தனர். சாக்கிய நாடு கோசலத்திற்கு உட்பட்டது. சாக்கிய நாட்டை அடுத்துக் கீழ்த்திசையில் கோலிய வகுப்பினர் வாழ்ந்து வந்தனர்.

சாக்கியரென்ற பெயரே ஆற்றல்மிக்க வீரர்களைக் குறிக்கும். சாக்கியர் க்ஷத்திரிய வகுப்பினர்; தாம் வீரமிக்க தனி வகுப்பினரென்று அவர்கள் பெருமை கொண்டிருந்தனர். நெல் வயல்களும், நெடிய சோலைகளும் நிறைந்த அடிவார நிலத்திலும், இமயமலைச் சாரலிலும் அவர்களுடைய நாடு பரவியிருந்தது. மழை வளத்தாலும், ஆறுகளின் வெள்ளத்தாலும் நாடெங்கும் முத்துப்போன்ற செந்நெல் சிந்தும் வயல்களோடு, சந்தன மரங்களும், தேக்கு, தேவதாரு, கருங்காலி மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன.

கபில வாஸ்து

சாக்கிய மன்னர்களின் தலைநகர் கயிலவாஸ்து[1]. முற்காலத்தில் அங்கே கபில முனிவர் தங்கியிருந்தாராம். இக்ஷ்வாகு வமிசத்தைச் சேர்ந்த நான்கு அரசிளங்குமரர்கள், தங்கள் தந்தையின் விருப்பப்படி, தங்கள் நாட்டைத் தம்பிக்குக் கொடுத்துவிட்டு, அங்கே வந்து,


  1. கபிலவாஸ்து—உரோகிணி நதிக்கரையிலிருந்த இந்நகரம் இப்போது பாழடைந்து கிடக்கின்றது. இது உத்தரப் பிரதேசத்தில் (பழைய ஐக்கிய மாகாணத்தில்) பிரிட்ஜ்மாங்குஜ் என்ற ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ளது. இப்போது இதன் பெயர் பிப்ரஹவ என்று சொல்லப்படுகிறது. உரோகிணி நதி இக்காலத்தில் கொகானா என்று அழைக்கப்படுகிறது. இது கங்கையின் கிளை நதிகளுள் ஒன்று.