பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறு ஆண்டுகளின் அருந்தவம் ⚫ 141

மனத்தினால் எண்ணுவதற்கே, பயங்கரமான கோரமான தவமுறைகளை யெல்லாம் அவர் மேற்கொண்டது இங்கே தான்; முடிவில் அவர் மெய்யறிவு பெற்றுப் புத்தரானதும் இவ்வனத்திலேதான். இவ்வனத்தை முதலில் அவர் பார்த்துத் தேர்ந்தெடுத்த முறையைப் பற்றி அவரே கூறியுள்ள விவரம் வருமாறு:

‘நன்மையானதை நாடித் தன்னிகரற்ற சாந்தியைத் தேடி அலைந்து கொண்டிருந்த நான், மகத நாட்டு மக்களிடையே சுற்றிக் கொண்டிருக்கும் போது, சேனானி நகரத்தின் அருகேயிருந்த உருவேலாவுக்கு வந்து சேர்ந்தேன். அங்கே இரமணீயமான ஓர் இடத்தைக் கண்டேன்; வனத்திலே அது ஓர் இன்பகரமான சோலை; பரிசுத்தமான நீருடன் ஆறு ஒன்று அருகே ஓடிக்கொண்டிருந்தது. அச் சோலையுள் எளிதாகப் போய் வரலாம்; அது மனோரம்யமான இடம்; பிச்சையெடுப்பதற்கும் அருகே ஒரு கிராமமும் இருந்தது. அப்போது நான் இவ்வாறு எண்ணினேன்:

“உண்மையிலேயே இந்த இடம் மனோகரமா யுள்ளது; வனத்திலே அடர்ந்த அழகிய சோலையாகவும் இருக்கிறது; அருகே தெளிந்த நீருள்ள ஆறு ஓடுகின்றது; அருகேயுள்ள இந்தக் கிராமத்தில் நான் உணவுக்குப் பிச்சை ஏற்றுக் கொள்ளலாம்! கடைத்தேற்றத்தில் நாட்டம் கொண்டு பெரு முயற்சி செய்ய விரும்பும் ஒருவனுக்கு இதுவே தகுதியான தலம்!”

‘ஆதலால், சகோதரர்களே, உடனேயே நான், “தவம் முயலுவதற்கு ஏற்ற தலம் இதுவே!”