பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 ⚫ போதி மாதவன்

இலைகளும், தளிர்களும் பன்னிற ஒளிவீசக் கையில் கொப்புடன் வானவில்போல் வளைந்து நின்ற அன்னை பின் நிலையை வயிற்றிலிருந்து கொண்டே உணர்ந்த போதிசத்துவர், தாம் வெளிவருதற்குரிய காலம் வந்து விட்டதென்று அறிந்தார். அன்னையின் விலாப்புறத்தின் வழியே அறவாழி அந்தணர் உலகிலே அவதரித்தார்.

அந்தக் காலத்தில் வையகமெல்லாம் ஒரு பெருஞ் சோதி சூழ்ந்திருந்தது. முன்போலவே பூமியதிர்ச்சி உண்டாயிற்று. மேகங்களின்றியே இடிகள் முழங்கின. சாரல் துளிகள் பனிபோல் விழுந்து கொண்டிருந்தன. எட்டுத் திசைகளிலிருந்தும் மெல்லிய பூங்காற்று வீசிக் கொண்டிருந்தது.

தேவர்கள் நால்வர் தெய்வக் குழந்தையை மென்மை யான துணியிலேந்தி, அவரை உலகுக்கு ஈன்றளித்த பெருமாட்டியிடம் காட்டினர். ‘மாதரசே! உமது மகிழ்ச்சியே, மகிழ்ச்சி! உமக்கு வீரத் திருமகன் பிறந்துள்ளான்!’ என்று கூறினர். போதிசத்துவரின் உடல் பரிசுத்தமாக இருந்தது. அன்னையின் உடலும் யாதொரு தீங்கு மின்றித் தூய்மையாயிருந்தது. பின்னால் பகவான் புத்தரே தமக்குச் சொன்னதாக அவருடைய அணுக்கத் தொண்டர் ஆனந்தர் கூறிய வரலாற்றில், காசிப் பட்டில் ஓர் இரத்தினத்தை வைத்தால், இரத்தினத்தால் பட்டு அசுத்தமாகாது, பட்டாலும் இரத்தினம். அசுத்த மாகாது. ஏனெனில் அவையிரண்டுமே தூயவை. இது பொலவே புத்தர் பிறக்கும்போதே புனிதராகத் தோன்றுகிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போதிசத்துவர் மண்ணகத்திற்கு வந்ததும், ‘இதுவே எனது இறுதிப் பிறப்பு; இனிமேல் பிறவியெடுக்க மீண்டும் கருக்குழியில் நான் விழமாட்டேன்! இனி என் மாதிரின் இலட்சியம் பூர்த்தியாகும், நான் புத்தரா-