பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புத்தரின் அவதாரம் ⚫ 21

வேன்!’ என்று கூறினார். பிறகு எவர் உதவியுமின்றியே எழுந்து நின்று, ஒவ்வொரு திசையும் பார்த்து ஏழடி நடந்து சென்றார். அவர் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் அவர் திருவடிகளின் அடியிலே பூமியிலிருந்து ஒவ்வொரு தாமரை மலர் மலர்ந்தது. ஒவ்வொரு திசையையும் நோக்கி அவர், ‘நானே உலகின் தலைவன், நானே முதன்மையானவன்! இதுவே எனது இறுதிப் பிறவி! இன்று முதல் என் பிறவிகள் முடிந்தன. நான் புத்தராகிப் பூதலத்தின் துக்கத்தை வேரோடு பறித்தெறியப் போகிறேன்!’ என்று கூறினார். இவ்வாறு கூறியது குழவியின் மழலைச் சொற்களிலன்று, தேசிகர்களின் தெளிந்த ஞானம் போலிருந்தது. தேவர்களும் மனிதர்களும் உவகை கொண்டு உள்ளம் பூரித்தனர். குருடர்கள் கண்பெற்று உலகில் பரந்துள்ள புத்தொளியைக் கண்டு மகிழ்ந்தனர். ஊமையரும் செவிடர் களும் போதிமாதவரின் அவதாரம் பற்றிய நன்னி மித்தங்களைப் பற்றி இன்பமாக உரையாடிக் கொண்டிருந்தனர். கூனிக் குறுகியிருந்தவர்கள் கூனல் நிமிர்ந்தனர். நொண்டிகள் உற்சாகம் பெற்று ஓடிச் சாடித் திரிந்தனர். அடிமைகளின் விலங்குகள் அற்றுவிழுந்தன. பட்ட மரங்களும் தளிர்த்துப் பசுமை பெற்றன. நரகத்தின் நெருப்பும் நடுங்கி அவிந்தது. மாநிலமெங்கும் மதுரகீதம் நிறைந்தது. குவலயம் முழுதுமே குதூகல முற்றது.

அன்னையையும் மதலையையும் மஞ்சன நீராட்டுவதற்குப் பக்கத்திலே நீரில்லையே யென்று பணிப் பெண்கள் தயங்கி நின்றனர். உடனே அவர்கள் கண் முன்பு வெந்நீரும் தண்ணீரும் நிறைந்த இரண்டு அழகிய தடாகங்கள் தோன்றின. அவற்றின் நீரால் மாயா தேவியை நீராட்டினர். அருகே வேறோரிடத்தில் திடீரென்று இரண்டு ஓடைகள் தோன்றின. அவற்றில்,