பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296 ⚫ போதி மாதவன்

அவளைத் திறந்த இரதம் ஒன்றிலே ஊர்வலமாக அழைத்துச் சென்றார். அரசரும் பிரபுக்களும் மதிப்பதற்கு அரிய பரிசுகள் பலவற்றை அனுப்பி வைத்தனர். மிகுந்த கோலாகலத்துடன் விசாகை தன் கணவனின் மாளிகையை அடைந்தாள். அங்கே எல்லாச் செல்வங்களும் பெற்று அவள் இனிது வாழ்ந்து வந்தாள்.

மிகாரருக்கு அன்னையாதல்

மிகாரர் ஜைன சமயத்தைச் சேர்ந்தவர். ஜைனத் துறவிகளை அவர் போய் வணங்கி வருவதும், அவர் களைத் தமது மாளிகைக்கு அழைத்து வருவதும் வழக்கம், ஒரு சமயம் அவர் விசாகையை அழைத்துக்கொண்டு அத்துறவிகளைத் தரிசிக்கச் சென்றார். ஜைனப் பள்ளியில் தான் சந்திக்கப்போகும் துறவிகள் ஆடைகளில்லாமல் நிர்வாணமாயிருப்பவர்கள் என்பதை விசாகை அறிந்ததும் வெட்கமடைந்து, தன்னை அங்கு அழைத்துச் சென்றதற்காக மாமனாரிடம் மிகவும் வருத்தமடைந்தாள். இதையறிந்த துறவிகள், அவள் புத்தருடைய உபாசிகை என்றும், அவளை மருமகளாக மாளிகையில் வைத்திருப்பதே தவறு என்றும் மிகாரருக்கு அந்தரங்க மாகச் சொல்லிவைத்தனர். ஆனால் அவர் அவர்கள் கூற்றை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை.

ஒருநாள் மிகாரர் தமது மாளிகையில் உணவு அருந்திக் கொண்டிருக்கையில் வாயிலில் பிக்கு ஒருவர் உணவுக் காகக் திருவோட்டுடன் வந்து நின்றார். மிகாரர் பிக்குக்களுக்கு ஐயமிடுவதற்கு அனுமதிப்பதில்லை யாதலால், விசாகை உள்ளிருந்துகொண்டே, ‘ஐயா பழஞ்சோறு உண்கிறார்!’ என்று சொல்லிப் பிக்குவை வேறிடம் பார்க்கும்படி அனுப்பிவிட்டாள். மிகாரர், தாம் கொதிக்கக் கொதிக்கப் புதிய அன்னத்தை உண்டு கொண்டிருக்கையில், அவள் பழையது என்று சொல்லி ஏளனம் செய்ததாக