பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304 ⚫ போதி மாதவன்

‘ஓ பிக்குக்களே! கடல் (கரையிலிருந்து) போகப் போகக் கொஞ்சங் கொஞ்சமாகப் பள்ளத்திலிருந்து பள்ளமாக, ஆழமாகிக் கொண்டே போகின்றது; திடீரென்று பெரும் பள்ளமாயில்லை. ஓ பிக்குக்களே! அதுபோலவே, இந்தத் தருமத்திலும், விநய ஒழுக்கத்திலும் பயிற்சி பெறுதல் படிப்படியாக அமைந்துள்ளது; ஒவ்வொரு முறையும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக அமைந்துள்ளது; திடீரென்று ஒரேயடியாக அருகத்து நிலையை அடைந்துவிடுவதில்லை. இது முதலாவது குணம்.

‘ஓ பிக்குக்களே! பெருங்கடல் ஒரே தன்மையுடன், கரையைக் கடந்து அப்பால் செல்வதில்லை,–அதுபோலவே, என் உரையைக் கேட்பவர்களுக்காக நான் அமைத்துள்ள விதிகளை அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தாண்டிச் செல்வதில்லை. இது இரண்டாவது குணம்

‘ஓ பிக்குக்களே! மகா சமுத்திரம் உயிரற்ற சடலத்தைத் தன்னகத்தே வைத்திருப்பதில்லை; கடலிலுள்ள எத்தகைய செத்த உடலாயினும், அதை அது விரைவாகக் கரையிலே கொண்டு போய் ஒதுக்கிவிடும். அதுபோலவே, யாராவது ஒருவர் தீயொழுக்கத்துடன், தீய குணங்களுடன், அசுத்தமான அல்லது சந்தேகிக்கத் தக்க நடத்தையுடன், சத்திய விரதங்களை மேற்கொண்டிருப்பினும், சிரமணராயில்லாமல், உள்ளம் மாசடைந்து, ஆசைகளுக்கு அடிமைப்பட்டுப் பயனற்ற ஜன்மமாக விளங்கினால்–அவருடன் சங்கம் எவ்விதத் தொடர்பும் கொள்ளாது; கூட்டம் கூடியதும் விரைவாக அவரை வெளியே கொண் போய்ச்சேர்த்து விடும். அந்த மனிதர் பிக்குக்களின்