பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 309

நான்கு ஆண்டுகள் கழிந்தன. ஐந்தாவது ஆண்டிலே அவர் வைசாலி[1] நகரை அடைந்தார்.

வைசாலி விரிஜி நாட்டின் தலை நகர். வட இந்தியாவில் அக்காலத்தில் மகதம், அங்கம், விதேகம், காசி, கோசலம், பாஞ்சாலம், குரு, அவந்தி, காந்தாரம் முதலிய பல இராஜ்யங்கள் தனித்தனி அரசர்களின் ஆட்சியில் இருந்து வந்தபோதிலும், விரிஜி நாடு மட்டும் ஒருவகை ஜனநாயகத்தைப் பெற்றிருந்தது. அந்நாட்டில் விரிஹியர், லிச்சவிகள், மல்லர்கள் ஆகிய வகுப்பினர்கள் தத்தம் குடும்பங்களுக்குக் ‘கணராஜர்கள்’ என்ற தலைவர்களை நியமித்துக்கொண்டு, அத்தலைவர்களின் மூலம் எல்லோர்க்கும் பொதுவான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது வழக்கம். அந்தத் தலைவரே குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு விரிஜி நாட்டின் அரசராயிருப்பார். லிச்சவிகள் பெருஞ் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கியதால், அவர்களிலேயே ஒருவர் அரசராக வருவதும் இயல்பாயிருந்தது. அரசர் ‘லிச்சவிகளின் சிங்கம்’ என்று அழைக்கப் பெற்று வந்ததாக வரலாறுகளிலிருந்து தெரிகின்றது. பல குறு நில மன்னர்களுக்கும் குடும்பத் தலைவர்களுக்கும் மேலே ஆட்சி அதிகாரம் அவர் வசமே இருந்து வந்தது.

அக்காலத்திய இராஜ்யங்களில் காசியும் கோசலமும் ஒரே ஆட்சியில் சேர்ந்திருந்தன. மகத நாடு நாளுக்குநாள் வல்லமை பெற்றுப் பெருகி வந்ததோடு, நாட்டின் பரப்பும் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆயினும் விரிஜி நாட்டு அரசரும் குறு நில மன்னர்களும், தங்கள் நாடு


  1. வைசாலி இக்காலத்திய பிரயாகை என்ற அலகாபாத் நகர் தான் என்று பௌத்தர்கள் கருதுகின்றனர். ஆனால் இராமாயணத்திலிருந்து அந்நகர் பிரயாகைக்குக் கீழே கங்கையின் வடகரையில் இருந்ததாகத் கெரிகிறது.