பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316 ⚫ போதி மாதவன்

பற்றி ஆசை வைக்க வேண்டாம்!’ என்று பகவர் பதிலுரைத்தார்.[1]

இரண்டாவது, மூன்றாவது முறையாகவும் கௌதமி முயன்று பார்த்தும், பயனில்லாது போயிற்று. பின்னர் அவள் அண்ணலை வலப்புறமாக நின்று வணங்கி விட்டுச் சோகத்துடன் கண்ணீர் பெருக்கி அழுது கொண்டே திரும்பிச் சென்று விட்டாள்.

புத்தர் ஆடவரின் இரட்சகரேயன்றிப் பெண்களின் இரட்சகரல்லர் என்று மகாநாமனுடைய[2] மனைவி அவரைப்பற்றிக் கூறினாளாம். அவன், தன் தமையனாராகிய ததாகதரின் கருணை சகல ஜீவராசிகளுக்கும் உரியது என்றும் அவர் பெண்களுக்கும் அறவுரை கூறுகிறார் என்றும் சொல்லி, அவளையும் ஐந்நூறு சாக்கியப் பெண்களையும் உபதேசம் கேட்டு வரும்படி அனுப்பி வைத்தான். மகா நாமனின் மனைவி மிக்க அழகுடையவள் ஏராளமான நகைகளையும், கண்ணைப் பறிக்கும் உயர்ந்த உடைகளையும் அணிந்து கொண்டு, அவள் நியக்குரோத வனத்துள் சென்றதும், அங்கே ஒரு பிக்கு அவ்வாறு அளவுக்கு அதிகமான ஆடம்பர நகைகளை அணிந்து கொண்டு ஐயனைத் தரிசித்தல் முறையன்று என்று கூறினார். உடனே அவள் நகைகளைக் கழற்றித் தன்


  1. கௌதமி சங்கத்தில் பிக்குணியாகச் சேர்வதற்கு முயன்ற இவ்வரலாறு ‘விநய பிடக'த்திலுள்ளது. வெள்ளைத் துகிலணிந்து, மன நிறைவும், பரிசுத்த ஒழுக்கமும் கொண்டு வாழ்ந்து வரும்படியும், அதனா லேயே நிலையான பயன் பெறலாம் என்றும் புத்தர் கௌதமிக்குக் கூறியனுப்பியதாகத் திபேத்திய ‘துல்வா'வில் குறிக்கப்பெற்றுள்ளது.
  2. சுத்தோதனரின் சகோதரருடைய குமாரன்.