பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 341

யாவரும் பெரு வியப்படைத்தனர். ஆலவிகன் இளவரசனைப் புத்தரிடம் ஒப்படைத்து விட்டான்.

பின்னர் பெருமான் இளவரசனை அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, நகரில் ஐயம் எடுத்து உணவருந்தியபின், ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். அவ்வமயம் மன்னனும், பெருந்திரளான மக்களும் அங்கே சென்று அவரைத் தரிசித்து உபதேசம் பெற்றனர். பெருமான் அப்போது ‘ஆலவிக சூத்திர’த்தை அவர்களுக்கு உபதேசித்தார்.

பிற்காலத்தில் இளவரசனுக்குத் தக்க பிராயம் வந்ததும், அவனுக்குப் போதி வேந்தரே முன்பு உயிர்ப் பிச்சை அளித்ததால், அவன் அவரிடம் போய்ச் சீடனாயிருக்க வேண்டும் என்று மன்னன் அவனை அனுப்பி வைத்தான். இளவரசனும் ஐந்நூறு துணைவர்களுடன் சென்று, பெருமானைக் கண்டு, பௌத்த தருமத்தை மேற்கொண்டு சிறப்படைந்தான்.

அணுக்கத் தொண்டர்

புத்தர் ஞானமடைந்த இருபதாம் ஆண்டில் அவர் சிராவஸ்தியில் ஜேதவன விகாரையில் தங்கியிருந்தார். வழக்கம்போல் கூட்டங் கூட்டமான மக்களுக்கு அவர் அறிவுரைகள் கூறிவந்தார். அந்தக் காலத்தில் தான் ஆனந்தர் பகவருக்கு அணுக்கத் தொண்டராக நியமிக்கப் பெற்றார். அதுவரை ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு பிக்குவாக அவருக்குத் தொண்டு செய்து வந்தனர். நிரந்தரமாக ஒருவரைத் தொண்டராக நியமிக்கா விட்டால், அவருடைய திருவோட்டைக்கூடப் பாதுகாக்க முடியாமலிருந்தது.

புத்தர் தமக்கு ஓர் அணுக்கத் தொண்டர் வேண்டு மென்று கேட்டவுடன் சாரீபுத்திரர் முதல் ஒவ்வொரு