பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 353

சிறையுள் புகுந்து வயோதிக மன்னருக்கு வேண்டிய ஆறுதல் மொழிகளைக் கூறினார்.

பின்னர் சில நாட்களில் அஜாதசத்துரு தன் குழந்தையைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கையில், தன்னையும் தன் தந்தை எவ்வளவு பிரியமாக வளர்த்திருப்பார் என்று எண்ணித் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பினான். ஆனால் அவன் விடுதலை செய்யுமுன் அவரே முக்தியடைந்து விட்டார் என்று பழைய வரலாறுகள் கூறுகின்றன.

புதிய மன்னனிடம் தேவதத்தன் பரிசுகள் பெற்று வருவதையும், அரச சபையில் அவனுக்குப் புகழ் ஏற்பட்டு வருவதையும் பற்றிப் புத்தர் பிரான் தம் சீடர்களுக்குச் சில சமயங்களில் விளக்கிக் கூறி வந்தார். மூடனுக்கு ஏற்படும் புகழும், ஆதரவும், அவனது அழிவுக்கே காரணமாகும் என்று அவர் கூறினார். வாழை குலை தள்ளுவதும், மூங்கில் கனி பெறுவதும் அவைகளின் அழிவுக்காகவே என்பதை அவர் உபமானமாக எடுத்துக் காட்டினார். ‘நீங்கள் ஊதியங்களையோ, உபகாரங்களையோ, போலிப் புகழுரைகளையோ விரும்பாமலிருங்கள்!’ என்று பிக்குக்களுக்கு எச்சரிக்கையும் செய்தார்.[1]

தேவதத்தனின் கொலை முயற்சிகள்

தேவதத்தன் மன்னனின் உதவி கொண்டு, பெருமானை அழிப்பதற்காக ஐந்நூறு வில்லாளரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஏராளமான பொன்னைப் பரிசளித்தான். ஆனால் அவர்கள் மனம் மாறிப் புத்த தேவரிடம் தரும் உபதேசம் கேட்கச் சென்று விட்டனர். பின்னால் கிரித்திரகூட மலையிலிருந்து ஒரு பெரும் பாறையைப் பகவர் அடிவாரத்தில் நடந்து செல்லும்போது


  1. சுத்த நிபாதம்