பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 ⚫ போதி மாதவன்

செய்து கொண்ட முடிவில் உறுதியுடன் நில்லுங்கள்! உங்களுடைய சொந்த இதயங்களையே நன்றாகக் கண்காணித்து வாருங்கள்! எவர்கள், சலனமடையாமல், சத்தியத்தையும் தருமத்தையும் பற்றுகிறார்களோ, அவர்கள் வாழ்க்கைக் கடலைத் தாண்டி விடுவார்கள்! துக்கத்திற்கு முடிவு கட்டிவிடுவார்கள்!’

பின்னர், லிச்சவிகள் பலரும் வந்து ஐயனைத் தரிசித்து ஆசி பெற்றனர். அப்போது பெருமான், ‘சூரியனும், சந்திரனும், எல்லாமும் அழியக்கூடியவையே எல்லாப் புத்தர்களும், எதிர்காலப் புத்தர்களும் அழிவுறக் கூடியவர்கள். நானும் நிருவாணமடைந்து விடுவேன்...... கதிரவன் மேற்கு மலைகளில் ஏறிச்செல்வதுபோல, மேல் நோக்கிச் செல்லும் (தருமப்) பாதையில் அடிமேல் அடியாக முன்னேறிச் செல்லுங்கள்!’ என்று உபதேசித்தார். லிச்சவிகள் மிகுந்த துயருற்று, ‘அந்தோ ! பரிசுத்தமான பொன் மலைபோல விளங்கிவந்த பெருமானின் திருமேனி விரைவிலே சாய்ந்து விடுமே! புனிதமும் அழகும் நிறைந்து வானளாவிப் பறந்து கொண்டிருந்த அருட் கொடி அற்று விழுந்து விடுமே!’ என்று கதறினர்.

ஒரு நாள் காலையில் பெருமான் வைசாலி நகரில் பிச்சையெடுத்துவந்து உண்ட பின்பு, யானை திரும்பிப் பார்ப்பதுபோல, நகரை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது அவர் ஆனந்தரை நோக்கி, ‘ஆனந்தா! ததாகதர் வைசாலியைப் பார்த்தல் இதுவே கடைசி முறை யாகும். இனி, ஆனந்தா, நாம் பண்டகாமாவுக்குச் செல்வோம்!’ என்றார்.

பண்டகாமா

அவ்வாறே அவர்களும் அடியார் பலரும் பண்டகாமா வுக்குச் சென்றனர். அங்கே பெருமான் பிக்குக்களுக்கு நால்