பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

400 ⚫ போதி மாதவன்

கொலைஞர்கள் ஆறு நாட்களாக மௌத்கல்யாயனரிடம் சென்று வாட்களை ஓங்கியபொழுது, அவர் தமது இருத்தி ஆற்றலால் ஆகாயத்திலே எழுந்து சென்று தப்பிக் கொண்டார். ஆனால் ஏழாவது நாளில், இருத்தி ஆற்றல் பயனற்றுப்போய், அந்த மெய்யடியார் கொலைஞர் கையிலே சிக்கிக்கொண்டார். அவர்கள் அவரை மிகமிகக் கொடுமையாக அடித்து வதைத்ததில் அவர் உடல் சதைப் புண்டு மாமிசக் குவியலாகிவிட்டது. கொலைஞர் உடலை ஒரு புதரிலே தூக்கியெறிந்து விட்டுச் சென்றனர்.

கோரமான இக்கொலையைப் பற்றிய செய்தி விரைவிலே நாடெங்கும் பரவிவிட்டது. அரசர் அஜாதசத்துரு உடனே புலன் விசாரித்துக் கொலைஞர்களையும் கொலைக்குத் தூண்டிய துறவிகளையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், குற்றவாளிகள் உண்மையை ஒப்புக்கொண்டனர். ஏராளமான குற்றவாளிகள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்ததால், அரண்மனைக்கு முன்னால் ஆயிரம் குழிகள் தோண்டப் பெற்றன ஒவ்வொரு குழியிலும் ஒரு குற்றவாளி இடுப்பளவுக்குப் புதைக்கப்பட்டான். பின்னால் அனைவரும் தீயால் எரிக்கப்பட்டனர்.

சீலம் மிகுந்த மௌத்கல்யாயனருக்கு மேலே கூறிய துர்க்கதி எப்படி நேர்ந்தது? அவருடைய இருத்தி ஆற்ற லெல்லாம் இறுதியில் ஏன் பயனற்றுப் போயிற்று? இவை களைப்பற்றிப் பிக்குக்கள் விவரம் தெரியாமல் திகைத்து, ஒருவரை யொருவர் விசாரித்துக் கொண்டிருந்தனர். அதையறிந்த புத்ததேவர் அவர்கள் அனைவருக்கும் விவரத்தை எடுத்துக் கூறினார். முந்திய ஜன்மம் ஒன்றில் மௌத்கல்யாயனர் தமது மனைவியின் தூண்டுதலால், தம் தாயையும் தந்தையையும் ஒரு வனத்திற்கு அழைத்துப் போய்,நேத்திரம் தெரியாத அவ்வயோதிகர்களைத் தனியே விட்டு விட்டுச் சென்றாராம். சிறிது நேரம் கழிந்தபின் அவர் மீண்டும் அவர்களிடம் வந்து, எவனோ ஒரு கொள்-