பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416 ⚫ போதி மாதவன்

துள்ளார்கள். ஈசான சகம் எதுவென்று இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை. ஆயினும் திருவாளர் இ.மு. சுப்பிரமணியபிள்ளையவர்கள், கி.மு. 493, கலி 2609, வைகாசி 19-ஆம் நாள் செவ்வாயன்று நிறைமதி 2 நாழிகை 11 விநாடிக்குத் தொடங்கிற்று. அன்றே புத்தர் நிருவாணமடைந்தார் என்று தமது ஆராய்ச்சியின் முடிவைத் தெரிவித்துள்ளார்கள், எனவே கி.மு.493-ஆம் ஆண்டே ஈசான சகாப்தம் 148-ஆம் ஆண்டாக இருத்தல் வேண்டும். மற்ற ஆராய்ச்சியாளர்களும், சரித்திர ஆசிரியர்களும் வெவ்வேறு ஆண்டுகளை யூகித்துக் குறித்துள்ளார்கள். ஆனால் அவ்வாண்டுகள் புத்தர் பெருமானுடைய வாழ்க்கையின் மற்ற அமிசங்களோடு பொருந்தவில்லை.

போதி மேவினை; புன்மை அகற்றினை;
சோதி வானவர் தொழ எழுந்தருளினை
ஆதி நாத! நின் அடியிணை பரவுதும்!