பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம் ⚫ 41

இருவரும் ஒரு முதியவரை அண்டித் தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்க வேண்டினர். அவர்,

‘உயிரைக் காப்பவனே - என்றும்
உயிர்க்(கு) உடையவனாம்;
அயர்வு வேண்டாமையா - இதுவே
அறநூல் விதிஐயா!’[1]

என்று கூறி, அன்னம் சித்தார்த்தனுடையதே என்று தீர்ப்பளித்தார். அவனியையெல்லாம் தன்னருளால் சொந்த மாக்கிக்கொள்ள அவதரித்த சித்தார்த்தன், அந்த அருளாலேயே வென்ற முதற் பரிசாக அம்புபட்ட அன்னத்தை எடுத்துச் சென்றான். அது குணமடைந்தபின், ஆகாயத்தில் பறந்து தன் இனத்தோடு இன்புற்று வாழும்படி அதை விட்டுவிட்டான்.

இவ்வண்ணம் இளவயதிலிருந்தே, எப்பொழுதும் எதிலும், சித்தார்த்தனுடைய கருணை துலங்கிக்கொண்டிருந்தது. போதிசத்துவ நிலைக்குரிய பாரமிதைகளாகிய[2]


  1. ‘ஆசிய ஜோதி’
  2. பத்துப் பாரமிதைகள்–இவை தச பாரமிதைகள் என்று கூறப்பெறும். தானம், சீலம், நிஷ்காமியம், பிரஜ்ஞை, வீரியம், சத்தியம், சாந்தி, அதிஸ்தானம் மைத்திரி, உபேட்சை, ‘நீலகேசி’ நூலில் இவை பின் கண்ட முறையில் குறிக்கப் பெற்றுள்ளன:

    ‘தானம், சீல, மேபொறை, தக்கதாய வீரியம்,
    ஊனமில்தி யானமே, உணர்ச்சியோ(டு), உபாயமும்,
    மானமில் அருளினை வைத்தலே, வலிமையும்,
    ஞான(ம்) ஈ ரைம்பாரமிதை......’

போ–3