பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பௌத்தமும் தமிழும் வாணிகர் சாத்தனார் அருளிச்செய்த செய்யுள்கள் அககா னூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் நூல் களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவ ரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவ ரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி= அரசமரம்; அரசமரத்தின கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால், பௌததர் அரசமாததைத் தொழுவது வழக்கம.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் எஉ-ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச் சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினாலே, அச்சங்க காலத்துக் குப் பிறகுதான் பௌத்தமதம் தமிழ்நாடு வந்திருக்கக்கூடும் என்பது தவறாகின்றது. கடைச்சங்க காலத்திலேயே, அதாவது, கி. பி, முதலாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது. ஆயினும், பௌத்த மதம் தமிழநாட்டிற்கு முதல் முதல் எப்போது வந்தது என் னும் கேள்விக்கு இது விடையன்று. இக்கேள்விக்கு விடை தமிழ் நூல்களில் காணக் கிடைக்கவில்லை. ஆகையால், புறச்சான்றுகளைக்கொண்டு ஆராய்வோம, நற்காலமாக, அசோக சக்கரவர்த்தி எழுது வித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் (கி. மு. உஎது. முதல் 2. 2 வரை யில்), தமிழ் இந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா முழு வதையும் ஒரு குடைக்கீழ் வைத்துலகாண்ட ஒப்பற்ற மன்