பக்கம்:பௌத்த தருமம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இரும் வியாதங்கள் - சந்தம், வீரியம், சித்தம், மீமாம்சை என்ற மன நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையான ஆற்றல்கள். ப. சைனர் ர் - விஞ்ஞானம். ம எணர்வு - சைதந்யம் என்ற உள்ள உணர்வு. தானம் - உயிர்ப்பித்தது, கூறியது என்று பொருள் - கட்டுரைத் தொகுதி. பவளலதம் - (உபோசதம்) உபவாசம்: விரத நாள். உபலம்பதை - பிக்குவாகச் சேர்ந்து பயிற்சி பெற்றவர் முழுத் தீக்கையும் பெறுதல். உபேட்சை - விருப்பு வெறுப்பின்றிச் சமமாகப் பார்க்கும் நிலை. உருவம் - நிலம், நீர் முதலியவை சேர்ந்த ரூபஸ்கந்தம். ஊறு - ஸ்பரிசம். கந்தகை - பகுதி. கந்தங்கள் - ஸ்கந்தங்கள் பார்க்கவும். கருமம் - செயல், வினை: வினைகள் காரணமாக எழும் பயன். கருமத் தொகுதி - வினைப் பயன்கள், பவம். காதை - கவிதை, செய்யுள். காமம் - ஆசை. காயானுபாஸ்னை - உடல் அசுத்தமானது என்று கருத்தைச் செலுத்துதல். குத்தகம் - சிறிது. குறி - ஆறு புலன்களின் மூலம் பெறும் அறிவு. சங்கம் - பெளத்த பிக்குகளின் திருக்கூட்டம். சந்தம் - ஒருமையுடன் மைேதத்துவ ஆற்றலின் சிகரத்தை அடைய ஆவலளிப்பது. சமாதி - நல்லமை தி, தியானம். சம்சயவாதி - பரம்பொருள், நித்தியமான ஆன்மா பற்றி உறுதியான முடிவில்லாமல் சந்தேகப்படுவோர். சம்சார சக்கரம்- இறப்பும் பிறப்புமாக மாறி மாறி வரும் வளையம். சம்யுத்தம் - தொடர்புள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/11&oldid=848838" இலிருந்து மீள்விக்கப்பட்டது