பக்கம்:பௌத்த தருமம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


சார்புகள் - நிதானங்கள் பார்க்கவும்.

சித்தம் - உள்ளம் பரிசுத்தமாயுள்ள நிலை.

சித்தானுபாஸனை - சிந்தனைகளைப் பிரித்துப் பரிசீலனை செய்தல்.

சிரத்தை - நம்பிக்கை.

சிராவக போதி - அருகத்தாகிப் போதியடைதல்.

சீலங்கள் - பத்து ஒழுக்கங்கள்: கொல்லாமை, திருடாமை, வியபசாரம் செய்யாமை, பொய்யாமை, போதைதரும் பொருள்களை உண்ணாமை, இரவில் தூய உணவை மிதமாக உண்ணல், அணிகள் முதலியவற்றை விலக்கல், தரையில் பாய்மீது உறங்குதல், களியாட்டங்களைத் தவிர்த்தல், பொன், வெள்ளியைத் தீண்டாமை.

சுத்தம் - சூத்திரம், உபதேச வசனங்கள்.

சுள்ளம் - குள்ளம், சிறிய.

சூனியம் - வெறுமை.

சூனிய வாதி - வாழ்வு மரணத்தோடு முடிந்துவிட்டது, வேறு நிலை யில்லை யென்ற கொள்கையுடையோர்.

செய்கை - ஸம்ஸ்காரங்கள்.

தகோபா - தாதுகோபம், அஸ்தி போன்ற அங்கங்களைப் புதைத்து வைத்து மேலே கட்டும் ஸ்தூபம்.

தச சீலங்கள் - சீலங்கள் பார்க்கவும்.

ததாகதர் - புத்தர், முன்னோர் வழியிலே செல்பவர்.

ததாகத கர்ப்பம் - புத்தக் கரு.

தத்துவங்கள் - முப்பத்தேழு தத்துவங்கள் பார்க்கவும்.

தம்மம் - தருமம்.

தருமம் - பொருள்கள், உயிர்களின் தன்மை; அவை களுக்குரிய நியமம்; உண்மை; ஒழுக்க முறைகள்; சமயக் கொள்கைகளின் தொகுதி, சமயம்.

தரும சக்கரப் பிரவர்த்தனம் - அற ஆழி உருட்டுதல்.

தரும விசாரம் - திரிபிடகங்கள் முதலிய நூல்களின் ஆராய்ச்சி.

தருமானுபாஸனை - தளைகள், போத்தியாங்கங்கள், புலன்களைப் பகுத்துப் பரிசீலனை செய்தல்.

தாதுகோபம் - தகோபா பார்க்கவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/12&oldid=1388620" இலிருந்து மீள்விக்கப்பட்டது