பக்கம்:பௌத்த தருமம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

105


கருதினார்கள். உடலின் தோற்றத்தின் போது அது உள்ளே புகுமென்றும், உடலின் அழிவில் அது வெளியேறுமென்றும் அவர்கள் கூறினார்கள். ஆனால் சாதாரண அறிவால் அது அறிய வொண்ணாதது என்பதும் அவர்கள் கூற்று.

‘எல்லையற்றது, எங்குமுள்ளது, அதுவே நான், அதுவே ஆன்மா—என்பதைக் கண்டு உணர்ந்து, அதையே அன்புகொண்டு, அதிலே ஆனந்தித்து நிற்பவன் ஸ்வராஜ்யம் பெற்றவன்; அவனே சகல உலகங்களிலும் அதிபதி’' என்று ‘சாந்தோக்ய உப நிடதம்’ கூறும்.

‘ஒரு மனிதன் தன்னை (ஆன்மாவை)’ “இதுவே நான்—அயம் அஸ்மி” என்று சொல்லி உணர்ந்து கொண்டால், பிறகு உடலைத் தொடர்ந்துகொண்டு அவன் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய ஆசை அல்லது விருப்பம் என்ன இருக்க முடியும்?’ என்று ‘பிருகதாரண்யக உபநிடதம்’ கேட்கின்றது. அந்நூலில் யாக்ஞவல்கியர் ஆன்மாவைப் பற்றித் தமது மனைவி மைத்திரேயி தெரிந்து கொள்ளும்படி விளக்கியுள்ள பகுதியும் கவனிக்கத் தக்கது:

ஒரு பிடி உப்பு, உள்ளே, வெளியே என்ற வேற்றுமையின்றி, ஒரே சுவையைத் தவிர வேறில்லாமல் இருப்பது போலவே, இந்த ஆன்மாவும், அகம் புறம் என்றில்லாமல், ஞானமயமாக உள்ளது. இந்தப் பூதங்களிலிருந்து (தாதுக்களாகிய மூலப் பொருள்களிலிருந்து) தோன்றி, இவைகள் மறையும் பொழுது தானும் (வெளியேறி) மறைகிறது. அது வெளியேறிய பின்பு பிரக்ஞை இருப்பதில்லை ......... அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/110&oldid=1386911" இலிருந்து மீள்விக்கப்பட்டது